பக்கம்:தமிழர் மதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் பிறழாதபடி செய்தனர். வேள்வி செய்வோனாலும் அவன் முன் னோராலும் செய்யப்பட்ட பாவத்தை நீக்குவர்.3’ (வ. நூ. வ.) Gk. ouranos (heaven). வாரணன்-வ. வருண. மித்திரன் (மித்ர) மித்திரன் பகலை ஆள்பவ னென்றும், வருணன் இரவை ஆள்பவ னென்றும், வேத விளக்க வுரைஞர் சாயனர் கூறுவர். அக்கினி (அக்னி-Agni) சுக மண்ணுலகத் தெய்வங்களுள் தலைமை யானவன் அக்கினி. அவன் வானுலகிற் கதிரவனாகவும், இடைவெளி யுலகில் மின்ன லாகவும், மண்ணுலகில் தீயாகவும், இருப்பன். வேள்விகளில், மேற்கும் கிழக்கும் தெற்குமாக, வட்டம் சதுரம் முக்கோணம் ஆகிய வடிவுகளில் வைக்கப்படும், காருக பத்தியம் ஆகவனீயம் தக்கிணாக் கினியம் என்னும் முத்தீ வடிவு கொள்வன். செல்வத் திற்குக் கரணியன்; இல்லறத்திற்கு நல்ல தலைவன்; அரக்கரை யழிக்கச் சிறந்த துணைவன்; வேள்விப் படைப்புக்களை யெல் லாம் தேவரிடம் சேர்ப்பதால், தேவர் தூதன்; இறந்தவரை நல்லுலகிற்குக் கூட்டிச் செல்வன். பகைவரை யழிக்கவும் உண வுப் பொருள்களை விளைக்கவும் நன் மக்களைப் பெறவும், அவன் அருள் வேண்டும். L. ignis. இந்திரன் (இந்த்ர) இடைவெளி யுலகிற் சிறந்த தெய்வம் இந்திரன். அவன் ஏழு தானவரையும் இலக்கக் கணக்கான தாசரையும் அழித்த னன்; சம்பரன் என்னும் அசுரனின் நூறு கோட்டைகளைத் தகர்த்து, நாற்பதாண்டின் பின் அவனைக் கண்டு கொன்று, திவோதாசனைத் துன்பத்தினின்று விடுவித்தனன்; மக்களைத் துன்புறுத்திய பதினாயிரம் விருத்திரரை மாய்த்தனன். இத் தகைய செயல்களைப் புரிய ஏழு காற்றுக் கூட்டங்கள் (மருத் கணங்கள்) அவனுக்கு உதவும். அதனால் மருத்வான் என்று அவனுக்குப் பெயர். அவனுக்கு ஆற்ற லுண்டாகுமாறு, சோம வேள்விகளிற் சோமம் படைக்கப்படும். மலைகளும் கோட்டை களும் போன்ற மழை பெய்யா முகில்களை, அவன் தகர்த்ததாகச் சொல்லப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/77&oldid=1428941" இலிருந்து மீள்விக்கப்பட்டது