பக்கம்:தமிழர் மதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் வேதக் காலத்தில் வருணனும் பிற்காலத்தில் இந்திரனும் தலைமைத் தெய்வமா யிருந்தனர். Joy Q உழை (உஷஸ்) விடியல் தெய்வம். கிரேக்கர் தெய்வம் இயோஸ் (Eos). உரோமர் தெய்வம் ஆரோரா (Aurors). சவிதா, சாவித்திரி (ஸவிதா, ஸாவித்ரீ) கதிரவன் எழுமுன் பெறும் பெயர். சூரியள் (சூர்ய) கதிரவன் எழுந்த பின் பெறும் பெயர். த. சூரன் -வ. சூர்ய. விண்டு (விஷ்ணு) எழுகை, உச்சிச் செலவு, விழுகை ஆகிய முந்நிலை யியக்கங் கொண்ட சூரியன். ஓ. நோ : த. விண்டு - வானம். அசுவினியர் (அஸ்வின்) அசுவினி மருத்துவர் என்று சொல்லப்படும் இருவர்; கதிர வனின் குதிரை யூர்வாரும் (?) தேவ மருத்துவரு மாவர். ஆதித்தர் (ஆதித்ய-Aditya) முதலில் பிதிர்த்(பித்ரு) தெய்வங்களாகவும், பின்னர் அதிதி யின் மக்களாகவும், கருதப் பட்டவர். பின்னிலையில், முதற்கண் அறுவராகவும் பின்னர் எண்மராகவும் இறுதியிற் பன்னிருவராக வுங் கணிக்கப் பட்டவர். இறுதி நிலையிற் கதிரவனைப் பன்னிரு மாதத்திலும் படி நிகர்ப்பவராகக் கொள்ளப் பட்டனர். பரிசனியன் (பர்ஜன்ய) முகில் தெய்வம். Ger. பர்கன்ய (parganya), Lit. பெர்க்குன (Perkuna), Old Slav. பெருனு (இடி), Russ, பெருன். வாயு காற்றுத் தெய்வம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/78&oldid=1428942" இலிருந்து மீள்விக்கப்பட்டது