பக்கம்:தமிழர் மதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் For M மருத்துக்கள் (மருத்) புயற்காற்றுத் தெய்வங்கள். மழைக்கு உதவுவதால் அல்லது மழையொடு கூடி வருவதால், இந்திரனின் தோழர் எனப்படு வர் இருபத் தொருவர் என்றும், நூற்றெண் பதின்மர் என்றும் சொல்லப்படுவர். உருத்திரன் (ருத்ர-Rudra) சூறாவளி அல்லது கடுங் காற்றுத் தெய்வம். ருத் (rud) என் பதை மூலமாகக் கொண்டு, அழுபவன், ஊளை யிடுபவன், உரறு பவன் என்று சொற்பொரு ளுரைப்பர். சினத்தவன் அல்லது வெகுள்வோன் என்று பொருள்படும் உருத்திரன் என்னும் தென்சொல்லின் திரிபாகக் கொள்ளினும், பொருந்தும். உருத்தல் - சினத்தல். உரு-உருத்திரம்-வ.ருத்ர, E. wroth, OE. wrath. சோமன் (ஸோம} மூசாவான் (Muja-vat) முதலிய மலைகளினின்று நிலா வெளிச்சத்திற் பிடுங்கிக் கொண்டு வந்த சோமக் கொடித் தண்டு களை, இரு கல்லிடை நெருக்கிப் பிழிந்த சாற்றை வடிகட்டி, பெருங்கலங்களில் வார்த்து நெய்யும் மாவுங் கலந்து புளிக்க வைத்து, பதமானபின் குடிக்கும் நறுமண இன்சுவைப் புளிங் காடியே, தேவரும் விரும்பும் 'சோம பானம்' என்னும் வெறிக் குடிப்பாம். இருக்கு வேதத்தின் -ஆம் மண்டலத்திலுள்ள ககச பதிகங் கள் அனையவும், சோம தேவனையே முதிர்ந்த பத்தி வணக்கப் பான்மையில், சோமதேவன் அற்றங் காவாதவர்க்கு ஆடை அணிவிக் கின்றான்; நோயாளிகளை நலப்படுத்து கின்றான்; குருடருக்குப் பார்வை யளித்து முடவரை நடக்கச் செய்கின்றான். எல்லா வல் லமைகளும் அவனுக் குண்டு. எல்லா இவுகளும் அவனிடத் திலேயே பெறற் குரியன. அவன் இறவாத தெய்வத் தன்மை யன்; தேவர்க்கும் மாந்தர்க்கும் இறவாமை யளிப்பவன்" என்று போற்றிப் புகழ்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/79&oldid=1428943" இலிருந்து மீள்விக்கப்பட்டது