பக்கம்:தமிழர் மதம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் ஓரிடத்தில், "ஓ தூய்மை யானவனே! நித்த லொளியும் மகமையு முள்ள அப் பொன்றா வுலகிற்கு என்னை உய்ப்பாயாக.” என்னும் வேண்டுதலு முள்ளது. கூச இவற்றை நடுநிலையாய் நோக்கின், கட் குடியன் பிதற்றல் கட்கும் இவற்றிற்கும் வேறுபா டின்மை, தெற்றெனத் தெரியும். சோமன் பக்கொசு (Bakkhos) என்னும் கிரேக்க மதுத் தெய்வத்தை ஒத்தவன். துவட்டா (த்வஷ்டா) தேவ கம்மியன். வொல்கான் (Voløan) என்னும் உரோமத் தெய்வத்தை ஒந்தவன். இரிபுக்கள் (ரிபு-Ribhus) வாசன் (வாஜ), விபுவா (விப்வா), ரிபு என்னும் மூவர். சுதன்வ முனிவனின் புதல்வர். வியக்கத் தக்க செயல்களைச் செய்து, இந்திரனின் நட்பைப் பெற்றுத் தேவராகி, சோமத் தைப் பருகத் தகுதி யடைந்தனர். விசுவ கர்மன் (விச்வ கர்மா) உலகமைப்போன். பிரசாபதி (ப்ரஜாபதி) உயிரினம் படைப்போன். பிருகற்பதி (ப்ருகஸ்பதி- Brihaspati) தேவரின் சடங் காசிரியன் (புரோகிதன்). பிராமணசுபதி {Brahmanaspsti) என்றும் சொல்லப் படுவான். வாச் (Vic) பேச்சுத் தெய்வம். பிராமணத்தில் வேதத் தாய் என்று சொல்லப் படுபவள். பூசன் (பூஷன்) கால்நடைகளைக் காக்குந் தெய்வம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/80&oldid=1428944" இலிருந்து மீள்விக்கப்பட்டது