பக்கம்:தமிழர் மதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் அபாம் நபாத்து (அபாம் நபாத்) கோட்டைக்குள் பெண்டிராலும் நீராலும் சூழப்பட்டிருக்கும் இடைவெளி யுலகத் தெய்வம். முகிலிடை மின்னலா யிருக்கலா மென்பது ஆராய்ச்சியாளர் கருத்து. திரிதன் (த்ரித) ஓர் இந்தோ இரானியத் தெய்வம். வனற்பதி (வனஸ்பதி) ஒரு பெருமரத் தெய்வம். சூரு ஓரிடத்தில் அதிதி, வருணன், மித்திரன் முதலியவ ருடனும், மற்றோ ரிடத்தில் சவிதா, புகன் (ஓர் ஆதித்தன்) முதலியவ ருடனும் விளிக்கப்படும் பெண் தெய்வம். சரசுவதி (ஸரஸ்வதி) முதற்கண் ஓர் ஆற்றுத் தெய்வம்; பின்னர் நாமகள். பாரதி (Bharati) ஆதித்தன் மகள்; பின்னர் நாமகள். பிதிர்க்கள் (பித்ரு) தனிப்பட்டவரின் முன்னோரும் மன்பதை முன்னோருமான பீதிருலக ஆவிகள். யுமன், யமி யமன் விவசுவானின் மகன் என்றும், பிதிர்க்கள் இருக்கும் உலகத்திற்கு அரசன் என்றும், அவன் வீட்டை நாற் கண்ணும் அகன்ற மூக்குத் துளைகளும் உள்ள இரு கொடிய நாய்கள் காக் கின்றன வென்றும், அவனும் யமியும் இரட்டைப் பிள்ளைகள் என்றும், யமி அவனை மணக்க விரும்பிய போது உடன் பிறந்தாளை மணக்கக் கூடாதென்று அவன் மறுத்து விட்டான் என்றும், இருக்கு வேதம் பத்தாம் மண்டலம், க0-ஆம் க௪-ஆம் பதிகங் களிற் கூறப் பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/81&oldid=1428945" இலிருந்து மீள்விக்கப்பட்டது