பக்கம்:தமிழர் மதம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுஅ தமிழர் மதம் ஆரியர் தெய்வ வணக்க நிலை வேத ஆரியர் தெய்வ வழிபா டெல்லாம், கொலை வேள்விப் பல் சிறு தெய்வ வணக்கமே. அசுவ மேதம் என்னும் குதிரை வேள்வி மிக அருவருப்பானது. தசரதன் குதிரை வேள்வியில், அவன் தலைமைத் தேவியான கோசலை, ஓர் இரா முழுதும் வேள்வி யாண் குதிரையைக் கட்டித் தழுவிக் கிடந்தாள் என்று, மார்க்கசகாய ஆச்சாரியார் வெளியிட்ட 'சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' என்னும் சுவடியிற் கூறப் பட்டிருத்தல் காண்க. 'பௌண்டர 'கம்' என்னும் வள்வியோ, சொல்ல வும் எழுதவும் ஒண்ணா இடக்கர் மிக்கதென்று சொல்லப்படு கின்றது. மாந்தனைக் காவு கொடுக்கும் நர மேதம் என்னும் வேள்வி யும் இருந்த தென்பதற்கு, சுன சேபன் கதை மட்டுமன்றி, "அந்த நரமேத மக மியற்றுதற்கு என்னும் பாரதக் கூற்றும் (இராச சூ. கச) சான்றாம். மாட்டிறைச்சி யுண்டு 'சோம பானம்' என்னும் தேட் கடுப்பன்ன தேறலை வயிறாப் பருகிவிட்டு, இருதிணை யுயிர்களையும் இரக்க மின்றிக் காவு கொடுக்கும் சிறு தெய்வ வணக்கம், காளிக்கும் காட்டேறி தூர்த்தேறி முதலிய பேய்கட்கும், பூதங்கட்கும் காட்டு வாண ரும் கல்லா மக்களும் கொடுத்து வந்த கடா வெட்டுக் கொடை யினும், கொடியதே யாம். ஆரியர் மறுமைக் கொள்கை மக்கள் இறந்தபின், அவருயிரைத் தீயும் கூற்றுவனும் வேற்றுலகிற்குக் கூட்டிச் செல்வர். நல்லோ ருயிர்கள் மக்கள் அளிக்கும் உணவால் அங்கு வாழ்ந்திருக்கும். அவை 'பித்ரு யாணம்' (தென்புலத்தார் வழி) 'தேவ யாணம்' (தேவர் வழி) என்னும் இருவழியால் நல்லுலகிற்குச் செல்லும். தென்புலத்தா ருலகிற்கு அரசன் கூற்றுவன். அங்குச் செல்லா நல்லுயிர்கள் ‘சுவர் லோகம்' என்னும் விண்ணுலகை யடையும். தீவினையர் அவ் வீருலகத்திற்கும் செல்லாது 'நரகிற் சேர்வர். குறிப்பு:- கோவில் வழிபாடு, பெருந் தேவ மதம், கடவுட் சமயம், நாற் பொருள், வீடுபேறு என்பன பற்றி, இருக்கு வேதி யர்க்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/84&oldid=1428948" இலிருந்து மீள்விக்கப்பட்டது