பக்கம்:தமிழர் மதம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் உ. ஆரியர் தமிழரை அடிப்படுத்திய வகைகள் (க) தமிழத் தெய்வ வணக்கத்தை மேற் கொள்ளல் ஆரியர் ஆடு மாடு மேய்க்கும் இனமாகக் கூட்டங் கூட்ட மாய்க் காந்தார நாட்டு (ஆபுகானித்தானம்) வழி இந்தியாவிற் குட் புகுந்தா ராயினும், அவருட் பூசாரியர் தவிரப் பிற ரெல்லாம் இந்தியப் பழங்குடி மக்களொடு கலந்து போனமையால், வட நாட்டிலும் தென்னாட்டிலும் ஆரியத்தைப் பரப்பியவரும், ஆரிய ரென்று பொதுவாகச் ல்லப் படுபவரும், பிராமணரே என்றறி தல் வேண்டும். ஆரியர் தம் முன்னோர் மொழியை மறந்து போனதற்கும், அவரது வேதமொழி வடநாட்டுப் பிராகிருதத்தொடு கலந்து எகர ஒகரக் குறிலில்லாம லிருத்தற்கும், அவர் சிறுபான்மையரா விருந்து பழங்குடி மக்களொடு 'கலந்து போனதே கரணிய மாகும். ஆரியர்க்கும் பழங்குடி மக்கட்கும் இடையே நடந்தனவாக வேதத்திற் சொல்லப்படும் போர்க ளெல்லாம், பிராமணியத்தை ஏற்றுக் கொண்டவர்க்கும் ஏற்காதவர்க்கும் இடைப் பட்டனவே யாம். விரல் விட்டு எண்ணத் தக்க பிராமணர் தென்னாடு வந்து, தாம் நிலத் தேவ ரென்றும் தம் மொழி தேவ மொழி யென்றும் சொல்லி, மூ வேந்தரையும் அடிப் படுத்தியதையும்; இன்றும் ஆரியச் சார்பான பேராயத் தமிழர் உரிமைத் தமிழரை வன்மை யாக எதிர்ப்பதையும்; நோக்கின், தமிழ் திரிந்தும் தமிழாட்சி யின்றியும் போன வடநாட்டில், ஆரியப் பூசாரியர் சில அரச ரைத் துணைக் கொண்டு நாட்டு மக்களை வென்றது, ஒரு சிறிதும் வியப்பன்று. ஆரியர், முன்பு பிராகிருதரையும் பின்பு திரவிடரையும் அதன் பின் தமிழரையும் வெல்லக் கையாண்ட வழிகளுள் ஒன்று, அவர் தெய்வத்தைத் தரமும் வணங்கல். இது அடுத்துக் கெடுத்தல் என்னும் வலக்காரத்தின் பாற்பட்டது. முதலிற் சிந்து வெளியிலும், பின்னர்ச் சரசுவதி யாற்றிற்கும் திருடத்துவதி யாற்றிற்கும் இடைப்பட்ட பிரம வர்த்தத்திலும், அதன் பின் விசனசத்திற்குக் கிழக்கும் பிரயாகைக்கு மேற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/85&oldid=1428950" இலிருந்து மீள்விக்கப்பட்டது