பக்கம்:தமிழர் மதம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் தன வாதலால், நீர்க் கூறனான திருமாலைக் காப்புத் தேவனாக வும், அழல் வண்ணனான சிவனை அழிப்புத் தேவனாகவும், அமைத்தனர் போலும்? அரன் (சிவன்) என்பதன் திரிபான ஹர என்னும் வடசொற்கு அழிப்பவன் என்னும் பொருளுண்மை யும், சிவனை அழிப்புத் தேவனாகக் கொள்ள ஏது வாயிற்று.அழிப் புத் திருமேனி என்னும் பெயர் அமங்கலமாய்த் தோன்றியதனால், அதனை மறைத்துச் சிவனியரை மகிழ்விக்குமாறு, சங்கரன் (நன்மை செய்பவன் ) என்றொரு பெயரைச் சிவனுக்கு இட் டனர். அப்பெயர் 'சி வ' என்னும் வடசொற் பொருளொடும் பொருந்துவ தாயிற்று, STO (ரு) தமிழாரியத் தெய்வ இணைப்பு (மங்கல அல்லது நல்ல என்று பொருள் படும்) 'சிவ' என் னும் அடைபெற்ற ஆரியத் தெய்வங்களுள் ஒன்றா யிருந்தத னாலும், அழிப்புத் தொழிற் கேற்ற வலிமிக்குடைமையாலும், கடுங் காற்றுத் தெய்வமான உருத்திரன் அழிப்புத் திருமேனி என்னும் சிவனோடு ஒன்று படுத்தப் பட்டான். திருமாலைக் குறிக் கும் விண்டு என்னுந் தென்சொல்லை யொத்த விஷ்ணு என்னும். வடசொல் கதிரவனைக் குறித்த தேனும், சொல் லொப்புமை யொன்று பற்றியே திருமாலை ஆரியத் தெய்வமாகக் கொண்டு விட்டனர். இனி, பிரமனைத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன் றிய மக னென்றும்; மாயோன் என்னுங் காளியின் தொடர்பினால் நீலி அல்லது நீலம்மை (நீலாம்பிகை) எனப் பெயர் பெற்ற மலை மகளை, மாயோன் என்னும் திருமாலின் தங்கையென்றும்; பொருத்தமற்ற ஓர் உறவும் பொருத்தி விட்டனர். இதனால், சிவன் மகனாக்கப் பட்ட முருகன் திருமாலின் மருக னானான். "நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டின்>’ (பெரும்பாண்.சOa -௪) மலைமக ளோடிணைக்கப் பட்ட காளியும் திருமாலின் தங்கை யானாள். "மாலவற் கிளங்கிளை" (சிலப். கடீ: ௬அ).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/90&oldid=1428956" இலிருந்து மீள்விக்கப்பட்டது