பக்கம்:தமிழர் மதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் எங (ச) முத் திருமேனிப் புணர்ப்பு தமிழப் பொது மக்கள் அரசரைப் பின் பற்றிப் பிராமணர்க்கு எத்துணை அடிமைப்பட்டுப் போயினும், ஆரிய வேள்வி மதத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணரும், வடநாட்டிற் சிவக் குறி (இலங்க) வணக்கஞ் செய்து வந்த சிவனியரை ஆண்குறித் தெய்வ வணக்கத்தார் (சிச்ன தேவ) என்று பழித்து வந்தா ரேனும்,தென்னாடு வந்தபின் சிவனிய மாலியங்களின் உயர்வை யுணர்ந்து, அவற்றை ஆரியப் படுத்தற்கு, இறைவன் முத் தொழிலையும் வெவ்வேறு பிரித்து, தாம் புதிதாகப் படைத்த பிர மனைப் படைப்புத் தேவ னென்றும், முத் தொழில் திருமாலைக் காப்புத் தேவ னென்றும், முத் தொழிற் சிவனை அழிப்புத் தேவ னென்றும், முத் திருமேனிக் கொள்கையைப் புகுத்தி விட்டனர். ஆயினும், தமிழர் பிரமனை ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், அவனுக்குக் கோவிலும் கும்பீடும் இல்லாது போயின. அதோடு, அடிமுடி தேடிய கதையால் அவன் பெரும் பொய்ய னாகவும் காட்டப் பட்டான். பிராமணரோ, மூத் திருமேனியரும் ஒருவரே என்பதை உணர்த்தற்கு, எங்கும் என்றும் முக்கோலுங் கையு மாய்த் திரிந்தனர். "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய.33 (தொல். மரபியல், எக). "உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்"" (கலித்.கூ). சிச்ன (தேவ) என்னும் வடசொல்லும் தென்சொல் திரிபே. சண்ணு-சண்ணம் - வ. சிச்ந. பிராமணர், அவர்க் குரிய கல்வித் தொழிற் கேற்ற வாறு, கூர் மதியராய்ப் படைக்கப் படுகின்றார் என்னும் ஆரியக் கருத் தைப் பிற வகுப்பா ருள்ளத்திற் பதித்தற்கே, பிராமணரின் முதல்வனாகக் கருதப்படும் பிரமனைப் படைத்துத் தெய்வமாக் கினர். க்கல் நீரும் அழிப்புத் தொழிற்குத் தீயும் சிறந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/89&oldid=1428955" இலிருந்து மீள்விக்கப்பட்டது