பக்கம்:தமிழர் மதம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் மணரும் ஏனையர் ஏனை மூவகுப்பாரு மாவர் என்றும், இப்பாகு பாடு இறைவன் படைப்பே யென்றும், கூறிவிட்டனர் ஆரியப் பூசகர். எஉ "ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரூத தஸ்ய யத்வைஸ்ய: பத்வியாக்ம் ஸத்ரோ அஜாயத. இது இருக்கு வேதம் அ-ஆம் அட்டகத்திலுள்ள புருட சூத்தம் (புருஷ ஸூக்த ) என்னும் பகுதியைச் சேர்ந்த தாகும். (இ-ள்) பிராமணன் பிரமத்தின் முகத்தினின்றும், சத் திரியன் அதன் தோளி னின்றும், வைசியன் அதன் தொடையி னின்றும், சூத்திரன் அதன் பாதத்தினின்றும், தோன்றினர். பிராமணர் தமிழகம் வந்தபின், அந்தணர் (அருளாளர்) என்னும் தமிழ முனிவர் பெயரையும் மேற் கொண்டனர். பாரதம் - அநுசாச, நீக பருவம் - பூதேவர் மகிமை யுரைத்த சருக்கத்து, "அந்தணர்கள் தவவலியா வரசர்செங்கோல் நிகழ்வ தெலாம் அந்தணர்க ளொழுக்கத்தா லாருயிர்கள் செறிவு தெலாம் அந்தணர்கள் நான்மறையா லருமாரி பொழிவ தெலாம் அந்தணரி லதிகருல சுதிலுண்டோ புகலாயே." ‘‘ஆயுள்வேண் டினர்செல்ல மாண்மைவேண் டினர்மிக்க சேயைவேண் டினர்தத்தஞ் சிலம்வேண் டினர்முத்தி தேயம்வேண் டினர்சுவர்க்க நீடுவேண் டினர்விப்பிரர் தூயதா வினிற்றொழுது சூழ்வரே யேற்றமென." என்னுஞ் செய்யுட்களும், "இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே என்னும் புறநானூற் றடிகளும் (௬ : க-உ0), பிராமணர் இந்தியா வெங்கும் பெற்றிருந்த மாபெரு மதிப்பை யுணர்த்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/88&oldid=1428953" இலிருந்து மீள்விக்கப்பட்டது