பக்கம்:தமிழர் மதம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் ததையும், கண்ட ஆரியர், தம் வெண்ணிறத்தையும் வேத மொழியின் வெடிப் பொலியையும் பயன் படுத்தி, தாம் நிலத் தேவர் (பூசுரர்) என்றும், தம் வேத மொழி தேவ மொழி யென்றும் கூறி ஏமாற்றி விட்டனர். அதனால், அவர் என்ன சொன்னாலும் நம்பவும், எது கேட்டாலும் கொடுக்கவும், அவரைத் தெய்வமாக வழிபடவும், வேண்டிய தாயிற்று. "தெய்வா தீனஞ் ஜத்ஸர்வம் மந்த்ரா தீனந்து தைவதம் தன் மந்த்ரம் ப்ராஹ்மணாதீனம் ப்ராமணா மமதைவதம்." இதன் பொருள்: உலகம் தெய்வத்துள் அடக்கம்; தெய்வம். மந்திரத்துள் அடக்கம்; மந்திரம் பிராமணருள் அடக்கம்; ஆதலாற் பிராமணரே நம் தெய்வம். ஒருசார் பழங்குடி மக்களின் பேதைமை கண்டு, பிராமணரே இங்ஙனம் தம்மைப் புனைந்துரைத்துக் கொண்டனர். "மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி.'" ஆதலால், மூ வேந்தரும் சென்ற நெறியே பொது மக்களும் சென்றனர். திரு வள்ளுவர் போன்ற தெள்ளறிஞர் எத்துணை நல்லறிவு கொளுத்தி எச்சரிப்பினும், பேதை வேந்தர் பொருட்படுத்தி யிலர். பிரா மணர்க்குக் கடவுட் குரிய பகவன் (பகுத்தளித்துக் காப்பவன், படி யளப்பவன்) என்னும் பெயர் இலக்கிய வழக்கில் வழங்கத் தொடங்கிற்று. உலக வழக்கில் அவரைச் 'சாமி' என்றனர். சொம் - சொத்து . சொம் -வ. ஸ்வம், ஸ்வாம். சொம்-சொம்மி.- வ.ஸ்வாமின். (உ) நாற்பிறவிக் குலப் பிரிவினை தொழில் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பொருளிலக்கணத்திற் கூறப்பட்டுள்ள, அந்தணர் அரசர் வணி கர் வேளாளர் என்னும் நாற்பாற் பாகுபாட்டைத் தீய முறை யிற் பயன் படுத்திக் கொண்டு, இந்திய ரெல்லாரையும் தொழில் நிற அடிப்படைகளில் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால் வரணப் பிறவி வகுப்புக்களாக வகுத்து, அவை முறையே ஒன்றி னொன்று தாழ்ந்தவை யென்றும், தாம் பிரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/87&oldid=1428952" இலிருந்து மீள்விக்கப்பட்டது