பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடலிலும் வானத்திலும் இருந்து உதிர்ந்த இலைகளாகக் கவிஞன் கூறுகிறான். அவற்றை பூமியின் இலைகளைச் சிதறிப்படிது போலவே மேல் காற்று அலைக்கழிக்கிறது. கள்வெறியோடு, தெய்வ வெறியாடும் தேவராட்டியின் கூந்தலைப் போல அவை பறந்து பரட்டையாகத் தோன்றுகின்றன. சாகின்ற ஆண்டின் சமரகீதமாக மேல் காற்று சங்கம் ஊதுகின்றது. இருளினின்றும், ஈரத்தை உறிஞ்சி மேகமாக்கி மழை பொழியவும் மின்னல் வெட்டவும் மேல் காற்று செயல் புரிகின்றது. இச்செயல்களில் மேல் காற்றின் அழிக்கும் சக்தியைக் கவிஞன் உணர்கிறான்.

இவ்வாறே கவிஞன் மாறி மாறி பல காட்சிகளை நம் கண் முன் கொணர்ந்து காற்றின் அழிவுச் சக்தியையும், உணர்வில் பதிய வைக்கிறான்.

ஆனால் காற்றின் முழு வலிமையையும் கண்ணால் கண்டுவிடமுடியாது என்று எண்ணிய கவிஞன் தானே இலையாகி, மேகமாகி, கடலாகி, காற்றாகி, ஆற்றாக அனுபவிக்க ஆசைப்படுகிறான். இவ்வாறு உலகின் துன்பங்களிலிருந்து விடுபட்டு காற்றின் மீது ஏறித் திரிய ஆசைப்படும் கவிஞன், காற்றின் வலிமையால் தனது உள்ளத்தில் வலுவேற வேண்டும் என்று விரும்புகிறான்.

இளமையில் காற்றைப் போலவே ஷெல்லி எவருக்கும் அடங்காத தன்மை பெற்றிருந்தான். அதனைப் போலவே தனது கவிதைக்கு ஆற்றல் உண்டு என நம்பியிருந்தான். தன் பாட்டினால் இவ்வையத்தை மாற்றி விடலாம் என்று கனவு கண்டான். இக் கனவுகள் கலைந்த பின் தோன்றிய ஏமாற்றம், வாழ்க்கையின் மீது அவனுக்குச் சலிப்பைத் தோற்றுவித்தது. தனது வலிமையின்மையை நினைக்க அவனுக்குச் சோர்வு தோன்றியது.

இந்நிலையில் காற்றின் வலிமையை அவன் காண்கிறான். தன் வலிமையின்மையையும், சோர்வையும், சலிப்பையும், நம்பிக்கை யின்மையையும் போக்கித் தனது சொற்களில் வலிமை பெய்யுமாறு காற்றை வேண்டிக்கொள்கிறான். இலைகளைத் துளிர்க்கச் செய்யும் காற்று தனது உள்ளத்தையும் புதுப்பிக்க வேண்டும். உதிர்ந்து விட்ட

107