பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T06 தமிழர் வரலாறு (பதஞ்சலியின் வியாக்கரண மகாபாஷ்யத்தின் திரு. கெயி லார்ன்ஸ் அவர்களின் பதிப்பு. பகுதி : 2. பக்கம் 269 "சொட” மற்றும் வேறு சொற்களின் தோற்றம் குறித்துப் பாணினியின் வேறு ஒரு விதியினை மேற்கொண்டுள்ளார் காத்யாயனர். “காம்போஜ என்ற சொல்லுக்குப் பின்னர் ஈற்றுவிகுதி எதுவும் இல்லை” என்பதே அவ்விதி. இவ்வகையில், ஒரு நாட்டைக்குறிக்கும் "காம்போஜ” என்ற சொல்லிலிருந்து அதன் அரசன் பெயராம் "காம்போஜஹ” என்ற சொல் பெறப்படும். காத்யாயனர், இவ்விதியை, “காம்போஜ மற்றும் பிற சொற்களுக்கு இணைக்கும் "லுக்” என்ற விகுதி “சொட” மற்றும் பிற சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும்” என மேலும் விரிவுபடுத்தினார். கம்பொஜாதிப்யொலுக் வகனம் சொடாத்யர்த்ஹம்”. இவ்வாத்திகம் (விதி) சொடஹ், கதொஹ், கெரளஹ் என்ற சொற்களின் தோற்றத்திற்கு வழி. செய்வதாகப் பதஞ்சலி கூறுகிறார். இவ்வகையில், இவ்விரு சொற்களும் அந்நாடுகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து பெறப்பட்டன. ஆனால், பாண்ட்ய என்ற சொல் மட்டும்,ஒரு நாட்டின் பெயராகவும் ஒரு நாட்டின் பெயராகவும் ஒர் அரச இனத்தின் பெயராகவும் ஒருசேர வழங்கப்பெறும் பாண்டு என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்ற கருத்துடையவர் காத்யாயனரும், பதஞ்சலியும் எனத் தெரிகிறது. - மதுரை குழ்ந்த நாட்டிற்கு அரசு வழங்கிய் பழங்குடி இனம், “பாண்டியர்” என அழைக்கப்பட்டனரே அல்லது “பாண்டு” என அழைக்கப்படவில்லையாதலின், இச்சொற் பிறப்பு முறை ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று. உண்மை இயல்பு இதுவாகவும், இச்சொற்பிறப்பு முறைமீது, பாண்டு. என அழைக்கப்படும் வடநாட்டுச் சத்திரிய இனம் ஒன்று தென்னாடு நோக்கிக் குடி பெயர்ந்து, தென்னாட்டிலும், இலங்கையிலும் பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற மிகப் பெரிய கோட்பாட்டினைக் காட்டிவிட்டார் திருவாளர் lg-.<Pg#. Lögfr&&frð 3/6ufrægir [Carmichal Lectures : 1918 Page:9-13)] .