பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத்தில்... வடஇந்தியத் தொடர்பு 5 r பக்ஸ்ஸிட்" எனக் கூறிச் சபித்தார். இத் தொடர்க்குத் திரு. கெய்த் அவர்களால் "உங்கள் கால்வழியினர், நில மகளின் கடைகோடிப் பகுதிகளைக் குடியுரிமையாகக் கொள்வார் களாக" என்பது பொருளாகக் கொள்ளப்பட்டது. ஆனால், சாயனா அவர்கள், "அன்தான் பக்ஸிஸ்ட்" என்ற தொடரை, "சண்டாளாதி ரூபம் நீச ஜாதி விலேலம் பஜதாம்” என, அதாவது "ஆரியரல்லாத தஸ்யூக்கள் ஆவார்களாக" எனும் பொருள் உணர்த்துவதாகக் கொண்டார். அய்த்ரேய பிராமணா, "த எதென்ந்த் ஹ்ராஹ் புண்ட்ராஹ் ஸ்பராஹ், புளிந்தா, மூதிபா, இத்யூதந்தியா பஹவோலவோ வைஸ்வரா மித்ரா தஸ்யூநாம் ப்ஹஅயிஸ்ட் ஹா" அதாவது, "எல்லைக்கப்பால் வாழும் மக்கள் ஆந்திரர், புண்டரர், சபரர், புளிந்தர், மற்றும் மூதிபர் ஆகியோர் ஆவர். இந்த தஸ்யூக்களில் பலர், விசுவாமித்திரர் வழியில் வந்தவராவர்” என்பதையும் கூறுகிறது. ஆதலின், சாயனா அவர்களின் பொருள் விளக்கம் மிகவும் நல்ல பொருள் விளக்கமாம். புண்ணிய பூமியாம் ஆரிய வர்க்கத்தின் தென் எல்லையாக, விந்தியம் இருந்து வந்தமையாலும், ஆரிய வழிபாட்டுப் பயன்கள் பறிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக, விந்தியத்திற்குத் தெற்கேதான் செல்ல வேண்டும் ஆதலாலும், சாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தெற்கே சென்றனர். "வடக்கு தெற்கு மலைகள், அதாவது, இமயமும், விந்தியமும், ஒருவனை அழித்துவிடுவான் வேண்டி, தமக்குத்தாமே சுழன்று கொண்டிருந்தாலும் "பிராண் (நில உலகும் தனியொரு பொருளும்) மெய்ப் பொருளாம் உயிர் ஆற்றல் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து கொண்ட வனை அவற்றால் அழிக்க இயலாது” எனக் கூறுகிறது கெளnத8 உபநிஷத். ஆகவே, வேத மந்திரங்கள் இயற்றப் படுவது கைவிடப்பட்ட காலத்துக்கு மிகப் பிற்பட்ட காலத்திலும், விந்தியமலைகள், ஆரிய நாட்டைப் பிற உலகிற்கு மறைத்து வைத்திருப்பதாகவே கொள்ளப்பட்டது. அறிவுடையோர், "இவ்விரு மலைகளுக்கிடையே உள்ள ஒருவகை, மான்இனக் கருப்பு ஆடு திரியும் நிலப்பரப்பை,