பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழர் வரலாறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்றாலும் இந்த வாணிகம், அடுத்த கால கட்டத்திலேயே பெரிய அளவைப் பெற்றது. அர்மினியாவில் ஒர் இந்திய வழிபாட்டு முறை : மேற்கு ஆசியாவுடனான இந்த வாணிகத்தின் ஒரு வியத் தகு விளைவு இங்கே விளக்கப்படும். அது, அர்மீனியாவில், ஒர் இந்திய வழிபாட்டு முறையின் நுழைவாகும். அர்மீனியாவைச் சேர்ந்த "அரஸ்சிடே" (Arsacide) மரபின் முதல் மன்னனாகிய, முதலாம் வளர்ஷக் (Valarshak) (கி.மு. 149-127) காலத்தில், இரு இந்தியத் தலைவர்கள், இயூப்ரட்ஸ் ஆற்றின் மேற்குக்கரையில், வான் (Van) என்ற ஏரிக்குத் தெற்கில், ஒரு புதிய குடியிருப்பை நிறுவிக் கிருஷ்ணன் பலதேவன் (அர்மீனிய மொழியில் முறையே கிசனி (Gisan), தெமெதெர் (Demeter) வழிபாட்டிற்காகக் கோயில்களைக் கட்டினர். இது, வட இந்தியாவிலிருந்து வந்த ஆரிய வழிபாட்டு முறையின் பெருக்காகுமா? மிக உறுதியாக இல்லை. கிருஷ்ண பலதேவர்கள், திருமாலின் அவதாரங் களாம் எனப் புராணங்கள் கூறினாலும், இவ்விரு கடவுள் களையும் ஒருசேர வழிபடும் தனிவழிபாட்டுமுறை, வட இந்தியாவில் எக்காலத்திலும் இருந்ததில்லை. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள், இதற்கான எண்ணற்ற அகச்சான்றுகளை அளிக்கின்றன. இவர்களில், முன்னவன் மாயோன் என்ற பெயரால், முல்லைநிலக்கடவுளாவன் கலப்பையைப் படைக்கலனாகவும், பனையைக் கொடியாக வும், கொண்ட வெண்ணிறக் கடவுள் எனும் பொருளில் வாலியோன் அல்லது வெள்ளையோன் எனப்படும் பின்னவன் தொடக்கத்தில் உழவுத் தொழில் முதலில் தொடங்கப்பட்ட முல்லைக்கும், மருதத்துக்கும் இடைப்பட்ட நிலத்தின் கடவுளாவன். முன்னவன் கருப்பு வண்ணமும், பின்னவன், வெள்ளை வண்ணமும், தமிழ்ப் புலவர்களின் விருப்பத்திற்குரிய அணிநலங்களாம். "கடலில் வளரும். வலம்புரிச் சங்கை ஒக்கும் நிறம் வாய்ந்த, கொலை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையும் உடையவன்" என்றும்,