பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழர் வரலாறு பெரிய பெரிய புகழ் வாய்ந்த வைரங்களைக் கொண்டு சென்றனர் (Warmington : Page . 235). வைரம் அல்லாமல், வைடூரியம், மாணிக்கம், படிகக்கல், கோமேதகம், செந்தடங்கல் உடைய மணிக்கல் ஆகிய இவ்வினங்களும், இந்தியாவிலிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை போலும் சிறந்த கற்களிலிருந்து, அகழ்ந்து செய்யப்பட்ட கிண்ணங்களுக்கு மிக்க விலை கொடுக்கப் பட்டன. ரோமானிய எழுத்தாளர்களால் இந்திய வைடுரியம் என அழைக்கப்படும் மரகதக் கல்லிலான ஒரு சின்னத்திற்கு நீரோ, பத்து லட்சம் "செஸ்டெர்செஸ்' (Sesterces) அதாவது வெள்ளி நாணயம் கொடுத்தான் என்பதைப் பிளைனி of austãofil Lóðj.g.) oš3pm/h (Natural History VI Page:26). விலை மிகுந்த ரத்தினக் கற்கள் போல் தோற்றமளிக்கும், வண்ணம் ஊட்டப்பெற்ற படிகப் பாறைக் கண்ணாடிகளும், கிரேக்கர்களாலும், உரோமானியர் களாலும், இந்தியாவி çõîðî5Ė ĝı @Lıpı'ıLıL'_L_65r. (Warmington. Page : 246.) @J`lbLJ, மாணிக்கம், நீலங்களும் தென்னிந்தியா விலிருந்து அனுப்பப்பட்டன. அவ்வாறே, கோமேதகமும் அனுப்பப் Lil' g (Periplws: Page: 56). "இந்திய இரும்பு எஃகுகளில், உரோமானியர் நடத்திய வானிகம், மிகவும் முக்கியமானது. நேர்த்தியான பண்டைய மேற்கு ஆசிய நாடாம் பார்த்தியாவில் பயன்படுத்தப்பட்ட உலோகம் (Parthian Metal), உண்மையில், இந்திய உலோகமே. திரு. செளமையஸ் (Sawmaise) என்பார், இந்திய எஃகைப் பக்குவம் படுத்துவது குறித்த, கிரேக்கரின் தனி ஒப்பந்தம் ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஆகவே, எஃகு செய்யும் தொழில் ரகசியத்தைக் கிரேக்கர் அறிந்திருக்க வேண்டும். உரோமானியர் இறக்குமதி செய்த மொத்த இரும்பு, இரும்பாலும், எஃகாலும் ஆன செய்பொருட்களே செப்டம் செய்யப்படா உலோகக் கரு அன்று. திரு. கிளிமென்ஸ் (Clemens) அவர்கள் உணர்த்துவது போல், உரோமானியர், இரும்பை, அழகிய மாதிரிக் காட்சிப் பொருளாக இருக்கத்தக்க சிறப்பு வாய்ந்த பல்வகைக் கருவிகளாகப் பண்ணினர். இந்திய உலோகம் அனுப்பப்பட்ட டமாஸ்கஸ்