பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 - தமிழர் வரலாறு நாகைப்பட்டினம் அல்லது நியமத்தைக் குறிக்கும். "படொயி” (Batoi) நாட்டில் உள்ள "கல்லிகிகொன்' (Kalligikon) "கலிமிர்முனை" அல்லது தலைமன்னார் முனையைக் குறிக்கும் கபெரிஸ் (Khawers) காவிரிப் பூம்பட்டினத்தையும், "மகெளர்" (Magour) மோகூரையும் குறிக்கும். "தொரிங்கோயி" அல்லது "சொரெடோயி" நாட்டில் உள்ள "ஒர்தெளரா" குறிப்பது மட்டுமல்லாமல்" "அருவர்னோயி" நாட்டில் உள்ள, காஞ்சீபுர நாட்டின் கடல் துறையாம், மல்லை, இன்றைய மகாபலிபுரம், அல்லது காஞ்சியைக் குறிக்கும் மாவிலங்கையாம், "மலங்கா" (Malanga) வையும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல ஆறுகளின் பெயர்களையும் தாலமி, குறிப்பிட்டுள்ளார். அவரால் "திமிரிகே" என அழைக்கப்படும் சேர நாட்டில், இன்று போலவே அன்றும் தலையாய ஆறாக இருந்த, முதல் ஆற்றின் பெயர், "பொய்வாய்" எனும் பொருள்படுவதாய "லெவுதோஸ்தோ மோஸ்" (Psewdostomos) என்பதாம் பேரியாறு, கடலோடு நேரே கலப்பதில்லை; அது, கிராங்கனூருக்கு அருகில், கழிநீரோடு கலந்து, தன் போக்கை இழந்துவிடுகிறது என்ற உண்மையை இப்பெயர் சுட்டுகிறது. அடுத்த கூறப்பட்டி ருப்பது, திமிரிக்கேவுக்குத் தெற்கில் உள்ள "பரீஸ்" (Baris) என்பதாம். இது, உறுதியாகப் பருவூர் ஆறே. அடுத்தது, "கொல் கோஹி"க்கு வெகு தொலைவில் இல்லாத "சோலென்" (Solen) என்பதாம். இது, கொற்கைக்கு அருகில் ஒடும், தாம்பிரபரணி ஆற்றின் தமிழ்ப் பெயராம் பொருநை என்பதன் பிழை வடிவேயாம். தாலமி குறிப்பிடும் அடுத்த ஆறு, காவேரியைக் குறிக்கும் "கபெரோஸ்" என்பதாம். அந்த ஆற்றின் தமிழ்ப் பெயராம் காவிரி என்பதில் இருப்பது போலல்லாமல், அதன் சமஸ்கிருதப் பெயராம் காவேரி என்பதில் இருப்பது போலவே, இச்சொல்லில் நெடில் ஏகாரத்தைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாம். காரணம். டியோன் செரிளேபாஸ்டம் (Dion - Chrysostum) அவர்கள் கூற்றுப்படி கி.பி.100 இல் அலெக்ஸான்டிரியாவில் இருந்த பிராமணக் குடியிருப்பைச் சேர்ந்த பிராமணர்