பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தமிழர் வரலாறு நிலையமாக ஆகிவிட்டது. பண்டைக் காலத்தில், தமிழ் நாகரி கத்தின் இடமாக அது இருக்கவில்லை என்பது உண்மை. தமிழ் என்ற சொல்லை, வடவர்கள், "த்ரவிட" என மாற்றிவிட்டாலும் நடைமுறை வழக்கில், "திராவிடர்” என்ற அச்சொல்லைச், சோழர், சேரர், பாண்டியர்களை நீக்கும் வகையில், காஞ்சீபுர மாவட்டத்து மக்களுக்கு மட்டுமேயாக வரையறுத்துக் கொண்டனர். சேர, சோழ, பாண்டியர் என்ற ஏனையோர்களிலிருந்து வேறுபட்டவராகவே திராவிடர் குறிப்பிடப்படுகின்றனர். யுதிஷ்டிரரின் ராஜகுயத்திற்கு வருகை தந்து, பாரதப் பெரும் போரில் பங்கு கொண்ட திராவிடர், சோழ, சேர, பாண்டியர்களின் வேறுபட்டவ ராகவே குறிப்பிடப்பட்டுள்ளனர், (மகாபாரதம் , 2 : 34, 1271; 3 : 1988 :5:22, 656 8:11, 434) திராவிடர் என்ற இப்பெயர், காஞ்சீபுர மாவட்டத்தைச் சேர்ந்த, ஆரிய மயமாக்கப்பட்ட தமிழர்களைக் குறிப்பாக உணர்த்துவதற்காகவே, ஆளப்படும் நிலைமை, கி.பி. ஏழாம் நூற்றாண்டிலும் இருந்து வந்துளது. யுவான் சுவாங், அம்மாவட்டத்தைத் திராவிட என்ற அச்சொல்லைச் சீனமொழி ஒலியியல் முறைக்கு ஏற்பத் திருத்தப்பட்ட வடிவாம் "த லொபி-ல" எனப் பெயரிட்டு அழைக்கிறார். காஞ்சியில் ஆகம வழிபாட்டு நெறி : கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்திற்கு மிகவும் அணித்தாக முந்தியிருந்த நூற்றாண்டுகளில், ஆகம மற்றும் ஆன்மிக வழிபாட்டு நெறிகள், இந்தியாவில், ஓரளவு பரவலாக இடம் பெற்றிருந்தன. மிகப் பெரிய ஆன்மீக வழிபாட்டு மையங்கள் ஏழு (திருக்கோயில் நகரங்கள் ஏழு சிவ பக்தி, அல்லது விஷ்ணு பக்திச் சுடர்களைக் கூறும், ஆன்மிகப் பேராற்றல் மைய இடங்களாக மதிக்கத் தக்க இடங்கள் ஏழு என அழைத்தால், பொருள் தெளிவுக்கு உதவுவதாய் இருக்கும்). பண்டைக் காலத்தில் முக்கிய இடங்களாக இருந்தன; அவற்றுள் காஞ்சியும் ஒன்று. -