பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - . தமிழர் வரலாறு காஞ்சிமாநகர், அத்துணைப் பழங்காலத்தில், பல்கலைக் கழகப் பெரு நிலையமாகத் திகழ்ந்தது என்றால், அது, அப்பெருநிலையைத் திடுமென, எடுத்த எடுப்பிலேயே அடைந்திருக்க இயலாது; அப்பெருநிலை, அம்மாநகரத்துக்கு வந்து குடியேறியவர்கள் காலத்திற்குப் பிறகே உருவாகி யிருக்கவும் இயலாது. அந்நிலை, அம்மாநகரத்து நிலைத்த குடியினராய, மண்ணுக்குரிய மக்களின் பல தலைமுறை இடைவிடா முயற்சியின் விளைவாகவே உருவாகியிருக்க வேண்டும். மேலும், அறிஞர் பெருமக்கள் பலரின் பிறப்பிடமாக வளர்ந்த ஒரு பெருநகர், தனக்கென ஒரு பெயரை, அது தோன்றிய காலத்திலேயே பெறத் தவறிவிட்டு, ஆங்கு வந்து குடியேறிய வடநாட்டுச் சமஸ்கிருத மொழியாளர், அவர்களின் மொழிப்பெயரால் பெயர் சூட்டும் வரை காத்திருந்தது என்பது, நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்று நெறியினை உணராதார் கூற்றே ஆம். - இக்குற்றச்சாட்டு முறையான குற்றச்சாட்டு என்பதைத் திருவாளர் பி. டி. எஸ். அவர்களும் ஏற்றுக்கொள்வர். காவிரி வைகைக்கரைத் தமிழர்களாம் அம்மண்ணுக்குரிய மக்களை, இந்தியாவுக்கு வடக்கே இருந்து வந்த வெளிநாட்டினராக மதிக்கும் சில மதியிலா வரலாற்றாசிரியர்களின் கூற்றைத், திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், "சில வரலாற்று ஆசிரியர் கள் திராவிடர்களின் மூதாதையர்களை, இந்தியாவின் வடமேற்கு அல்லது வடகிழக்குக் கணவாய்கள் வழியாக, நம்பிக்கை மிக்க நல்ல வழிகாட்டிகளின் துணையோடு, கொண்டுவந்து எடுத்த எடுப்பிலேயே முழுமை பெற்ற வெளிநாட்டு நாகரிகத்தோடு, காவிரி வைகைக் கரைகளில் குடியமர்த்துகின்றனர்" (பக்கம் : 2) எனக் கூறி எள்ளி நகையாடுவதும், அதேபோல், வடஆரியர் வருகைக்கு முன்பே முதிர்ந்த நாகரிகம் பெற்று மூத்த குடியினராய தமிழர்களை, நாகரிகம் அற்ற காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்திருந்து, ஆரியர் வருகைக்குப் பின்னரே நாகரிகம் உலகத்தில் அடியிட்டவராகக் கருதும் வேத மந்திரங்கள், இராமாயண,