பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 197 பொறுப்பற்ற இலக்கண ஆசிரியராக இருந்திருக்க மாட்டார், அவற்றை அவர் அறிந்திருந்தால், அவற்றிற்கான இலக்கண் அமைதி கூறியிருப்பார்; அவற்றை அவர் அறிந்தவர் அல்லர். அவர் மட்டுமன்று அக்காலத்து ஆசிரியர் எவருமே அறிந்திருக்கமாட்டார்” எனக் கூறியதை ஏற்றுக்கொள்ளாத திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், "பாணினி, அப்பெயர்களை நன்கு அறிந்தவர்தாம். ஆனால், அப்பெயர்கள், சமஸ்கிருதச் சொற்களாக இல்லாமல், தமிழ்ச் சொற்களாகவே, அவை பற்றிய இலக்கணத்தை வகுக்கவில்லை எனக் கூறவேண்டுமே ஒழிய, அவர் அவற்றிற்கான இலக்கணம் வகுக்கவில்லை; ஆகவே அவர், அந்நாடுகளை அறிந்திருக்கவில்லை என்பது பொருந்தாது. திரு. பந்தர்காரின் இவ்வாதம், இருக்கு வேதத்தில் ஆலமரம் குறிப்பிடப்படவில்லை என்பது கொண்டு இருக்குவேத காலத்தில் ஆலமரமே இருக்கவில்லை என்பது போலும் பொருளற்ற வாதமாம்" (பக்கம் : 123,124) என மறுத்துள்ளார். அங்கு அவ்வாறு வாதிட்ட திருவாளர் அய்யங்கார், கி. மு. 200இல் வாழ்ந்த பதஞ்சலி, "மதுராபுரக", "உறகபுரக" என்ற சொற்களுக்கான இலக்கண அமைதி கூறாது, "காஞ்சீபுரக" என்பதற்குமட்டும் இலக்கண அமைதி கூறிய தற்குப் பதஞ்சலி காலத்தில், வட இந்திய மொழி வல்லுநர்க் குத் தெரிந்திருக்குமளவு சிறப்புற்று விளங்கி இருந்தாலும், அது தனக்கென ஒரு தமிழ்ப் பெயரைக் கொண்டிருக்கவில் லை என வாதிடுவது எவ்வாறு பொருந்துமோ அறியோம். கி. மு. ஏழாம் நூற்றாண்டினராய பாணினியின் இலக்கண நூலாம் பாணினியத்திற்குக் கி. மு. நான்காம் நூற்றாண்டில் விளக்க உரை அளிக்கவல்ல சமஸ்கிருதப் பேராசிரியர் காத்யாயனரையும், கி.மு. நான்காம் நூற்றாண்டில் மெளரியப் பேரரசனாகத் திகழ்ந்த சந்திரகுப்தனுக்கு அமைச்சனாக இருந்து அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியனையும் பெற்று அளித்த பெருமைக்கு உரியது காஞ்சிமாநகர் என்பது உண்மை. (தமிழர் வரலாறு : 123, 135, 142, 325 பக்கங்கள் காண்க). . .