பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தமிழர் வரலாறு தொண்டைமான் இளந்திரையனைக் காணச் செல்லும் பெரும்பாணனுக்குச் செல்லும் வழியினைக் காட்டுவதாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படையில், அரசுக்கு வரவேண்டிய வரியினைத் தண்டுவோர், விற்படையோடு வழிநெடுக வீற்றிருக்கும் காவல் நிலையங்களையும் (80 - 82) அதனால், வழிச்செல்லுவார், கொண்டு செல்லும் பொருட்களைக் கொள்ளை கொண்டு ஓடிவிடும் கொடியோர் இல்லா வழி நலத்தையும் (39 - 4) உமணர், உப்புப் பொதி ஏற்றிய வண்டிகளின் பெருஞ்சாத்துத் தொடர்ந்து சென்று கொண்டே இருப்பதால், பெருவழிகள், இரவிடைச் செல்வார்க்கும் ஏமமாக அமைவதையும் (60 - 66) வழிப்போவார் தம் வயிற்றுப்பசி தீரத் தேக்கிலையில் உணவு படைக்கும், சத்திலை வேய்ந்த குடியிருப்புக்களைக் கொண்ட சிற்றுரர்களையும் 188 - 105) செல்லும் வழி நெடுகிலும், செல்வரிசிச் சோற்றினை வழங்கும் எயினர் காட்டரண்களையும் (21 - 133 பகத்தினை அரிசிச் சோற்றைப் பாலுடன் கலந்து பருகப்பண்ணிப் பசி தீர்க்கும் கோவலர் குடியிருப்புக்களையும் (166 - 168) அவரைப் பருப்பு கலந்து ஆக்கிய வரகரிசிச் சோற்றை வருவார்க்குப் படைக்கும், வரகுவைக்கோல் போர்த்து வரிசை வரிசையாக உள்ள குடில்களைக் கொண்ட சிற்றுரர்களையும் (191 - 196) விருந்தினர்க்குக் கோழிப் பொரியலோடு வெண்சோறு படைக்கும் வளமிக்க பேரூர்களையும் (254 - 256) கொழியல் அரிசிக் கூழைச் சுட்ட மீனோடு கொடுக்கும் வலைஞர் குடியிருப்புக்களையும் (274 - 282) நெய்யில் பொரித்த மாதுளங்காயோடு, மாவடு கலந்த இனிய உணவினை அளிக்கும் மறைகாப்பாளர் உறை பதிகளையும், (301 - 310) பினவொடு சேரவிடாமலும், அரிசிமா தவிர்த்து வேறு எதையும் உண்ணவிடாமலும் ஓம்பி வளர்த்ததனால் கொழுத்த பன்றிக் கறியொடு களிப்பு தரும் கள்ளும் வழங்கும், செல்வம் கொழிக்கும், வான்தோய் மாடங்கள் மலிந்த பட்டினங்களையும் (336 - 345) வாழை, பலா முதலான பழவகைகளையும், பண்துங்கையும் தெவிட்டுமளவு வழங்கி, நீர் வேட்கை தணிக்கத் தெங்கின் நீரையும் வழங்கும் உழவர்