பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழர் வரலாறு கடைசியில் வரும் மூன்று சொற்களுக்கும், திருவாளர் சாயனா (Sayana) அவர்கள், பறவைகள், மரங்கள், மரவகைகள், பாம்புகள் என்றும், திருவாளர் ஆனந்ததிர்த்தர் (Anandateerthar) அவர்கள், பிசாசுகள், இராக்கதர்கள், அசுரர்கள் என்றும் பொருள் கொண்டனர். திருவாளர் கெய்த் அவர்கள் வாயஸர்கள் என்பார், இனச் சின்னமாகப் பறவைகளைக் கொண்டவர் (மத்ஸியர்களும், ஆஜர்களும், வேறு வேறு விலங்குகளைத் தங்கள் இனச் சின்னங்களாகக் கொண்டிருப்பது போல) என்றும், வங்காவகடர் என்பார் பெரும்பாலும் வங்கர், மகதர் என்றும், சேரபாதர் என்பார், சேரர் என்றும் பொருள் கொண்டுள்ளார். கூறப்பட்டிருக்கும் சூழ்நிலையை நோக்க, அவர்கள் ஆணை மீறியது என்பது, தீவழிபாட்டைப் புறக்கணித்தலாம்; திரு. கெய்த் அவர்களின் பொருள்விளக்கம், முறையானது என நான் நினைக்கின்றேன். நான், பின்னர் விளக்க இருப்பது போல், ஆரிய நாகரிகம், சேர நாட்டைப் பண்டை நாட்களில், பரசுராமன் குடியேற்றத் தொடக்க நாட்களில் சென்று அடைந்திருக்க வேண்டும். விந்தியத்திற்குத் தெற்கில் ஆரிய அரசர்கள் : х வேத காலத் தொடக்கத்தில், விந்தியத்திற்குத் தெற்கில் உள்ள இந்தியாவில், ஆரிய அரசர்களின் ஆட்சியின் பரப்பளவு குறித்து இனி ஆய்கின்றேன். புராணங்களிலிருந்து, அரிச்சந்திரனுடைய பாட்டனார் திரய்யாருணனின் சம காலத்தவன், கார்த்தவீரியார்ச்சுனன் என அறிகிறோம். அவன், ஆரிய வம்சம் தொடங்கி, ஏறத்தாழ முப்பது தலைமுறைகள் பின்னரும், இராமச்சந்திரனுக்கு ஏறத்தாழ முப்பது தலைமுறைகள் முன்னரும், அதாவது வேதகாலத்தின் முக்கூறுகளில், முதல்கூற்றின் கடைசியில் வாழ்ந்தவன்; அர்ச்சுனன் ஒரு மகாவீரன்; அவன், சாம்ராட் மற்றும் சக்ரவர்த்தி என்ற இருபெயர்களும் குட்டி அழைக்கப் பட்டவன். அவன் அய்அய (Haihaya) குலத்து ஆட்சியை, நீண்டகாலம் வரை உச்ச நிலையில் வைத்திருந்தான். அததுடன் வட இந்தியா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வருதல் பொருட்டுத் தக்கண பாதத்தைச் சேர்ந்த,