பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன். 229 வெண்மணல் பரப்பில், நிலவொளியும், நிறை இருளும் மாறி மாறி, விட்டு விட்டுப் படிந்து கிடப்பதுபோல், மீன்பிடி வலைகள் விரித்துப் போட்டு உலர்த்தப்பட்டிருக்கும். பரதவர், தழையாடை உடுத்திருக்கும், மாமை நிற மேனியராம் மகளிரோடு, விழுதுகள் தொங்கும் தாழையின் அடியில் வளர்ந்திருக்கும் வெண்தாளி மலர் மாலை அணிந்து, கொடிய சினம் உடையதான சுறாமீனின் கொம்பை, அம்மனல் பரப்பில் நாட்டி அக்கொம்பில் குடிகொண்டிருக்கும் கொடிய தெய்வத்தை வழிபடல் கருதித் தலைமயிரில் தாழைமலர் அணிந்து, சருக்கை வாய்ந்த அடியினையுடைய பனைமரத்துக் கள்ளையும், தாம் விரும்பும் உணவு வகைகளையும், உண்டு, மகிழ்ந்து ஆடிக்களிப்பர். புலால் நாறும் மணற்பரப்பையும், மலர்களையும் உடைய கடற்கரைக்கண், கரிய மலையை அடைந்த, பொன்னிற மாலை முகில் போலவும், கரிய நிறமேனித் தாய் மடியில் பால் உண்ணத் தவழ்ந்து கிடக்கும், செம்பட்டை மயிரினரான மழலை போலவும், தெளிந்து நீல நிறம் காட்டும் கடல் நீரோடு, காவிரி ஆற்றுக் கலங்கள் செவ்வெள்ளம், கலக்கும் அலைகளின் ஒலிஒயா அப்புகார்ப் பகுதியில், பண்டைய பாவம் போகக் கடல் நீரில் ஆடியும், கடல் நீர் ஆடியதால் உடலில் படிந்துவிட்ட உப்பு மாசினைப் போக்க நறும்புனலில் மூழ்கி எழுவர், அடுத்து நண்டுகளைப் பிடித்து ஆட்டம் காட்டுவர் உரங்கொண்டு பாயும் அலைகளைக் கால்களால் உழக்கி விளையாட்டயர்வர், மணலில் பாவை பண்ணுவர் ஐம்பொறிகளாலும் நுகரும் இன்பங்களையெல்லாம் நுகர்ந்து தீர்ப்பர். இவ்வாறு ஆடி இன்பம் நுகர்ந்தும் மனநிறைவு காணாமல், மேலும் மேலும் நுகரவேண்டும் என்ற தீராக் காதலோடு பகலெல்லாம் ஆடி மகிழ்ந்துவிட்டு, இரவு வந்துற்றதும், அப்பெருங் காவிரி மணலிலேயே படுத்து உறங்கிவிடுவர்." . . . . . . . . . "எக்காலத்தும் பொய்த்துப்போகாது, ஆண்டு முழுவதும் நீரோடிக்கொண்டிருக்கும் அக்காவிரி ஆற்றின், மலர்கள் உதிர்ந்து மண்டிக்கிடக்கும் இருகரை மருங்கிலும், நெடிய துண்கள் மீது வானளாவக் கட்டப்பட்டிருக்கும் மாளிகை களில் வாழ்வார், இசைப்பாடல் செவிமடுத்தும், நாடகங்