பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் r 24] வெளிப்படுத்தும் பாக்கள், ஆரிய மூலம் அறவே இடம் பெறாத பாக்களிலும் காலத்தால் பிற்பட்டவை என்பதை எளிதில் காணக்கூடும். தமிழ் அரசர்களும், புராண அரச மரபுகளாம் சூரிய, சந்திர மரபுகளோடு தங்களை இணைத்துக்கொள்வதைத் தேடி அலைந்தனர். இவற்றிற்கான எடுத்துக்காட்டுகள், பின்வரும் அதிகாரம் ஒன்றில் கொடுக்கப்படும். கரிகாலன் வாழ்க்கையில் கல்வெட்டுகள் அளிக்கும் விளக்கம் : கரிகாலன் வாழ்க்கையை, இதுகாறும், சமகால இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்ந்தோம். கரிகாலன் வாழ்க்கையின் சில நிகழ்ச்சிகளுக்கான கல்வெட்டுச் சான்று உறுதிப்பாட்டினை, இச்சோழ மன்னன் காலத்துக்குப் பிற்பட்ட காலத்துக் கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டிருக்கும் காதுவழிச் செய்திகளிலிருந்து பெறக்கூடும். அவ்வகையில், பெரும்பாலும், பதிப்பித்து வெளியிடப் படாதனவாய ரேனாடு கல்வெட்டுக்கள். அவற்றுள் ஒன்று முன்பே எடுத்துக் காட்டப்பட்டது. அம் மாவட்டத்தைக், கரிகாலன் வெற்றி கொண்டது, அவன் காடுகளை அகற்றியது, நகரங்களைத் தோற்றுவித்தது, நீர்ப்பாசன முறை களை வகுத்தது, அவன் வழி வந்தவர்களாகிய, தெலுங்கு பேசும், சோழ அரச இனத்தைத் தோற்றுவித்தது ஆகியவற்றிற்குச் சான்று பகர்கின்றன. "கி. பி. 640-இல் சீன யாத்திரீகன் ஹறியான் ஸ்வாங் காலத்தில், இத்தெலுங்கு ஆவணங்களை நாம் கண்டெடுத்த நிலப்பகுதியில், "கு-லி-யெ" (Chw-i-ye) என்ற பெயருடைய நாடு இருந்திருப்பது, கி. பி. ஏழாம் நூற்றாண்டில், இந்நாடு இருந்தது என்பதற்குத் தெளிவான சான்று ஆகும்" (Ep.ind.Vo.XIPage:344). இவ்வரசு இனத்துச் செப்பேடுகளில், புண்ணிய குமாரனின் மாலே பாடு செப்பேடுகள், "இந்தியக் கல்வெட்டுகள்", பதினோராம் தொகுதியில் (Ep. Ind. Vol. XI) வெளியிடப்பட்டுள்ளன. கரிகாலன் ஆட்சிக்குப் பிற்பட்ட காலத்தில், இவ்வினத்து அரசர்கள், காஞ்சிப் பல்லவர்களுக்கு அடங்கியவராயினர்;