பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 - தமிழர் வரலாறு கரிகாலனும் காஞ்சியும் : தெலுங்கு சோட ஆவணங்களின்படி காவிரியை, இருகரைகளுக்குள்ளே அடக்கியதோடு, கரிகாலன் காஞ்சியிலிருந்தும் ஆட்சி புரிந்தான் (Madras Ep. Report 1900. Page , 17). திருவாலங்காட்டுச் செப்பேடுகள், அவன், காஞ்சிக்குப் பொன் வேய்ந்தான் எனக் குறிப்பிடுகின்றன. (காஞ்சிம் யஸ்க நiசகார கனகைஹ்" V 42 S.I.I. Vol. Il part Page:395). இதற்கு, அவ்விடத்துக் கோயில் கோபுரத்தைப் பொன் தகடுகளால் மூடினான் என்பதே, பெரும்பாலும் பொருனாகும். இக்கோயில், தென்னிந்தியாவில் ஆகம வழிக் கடவுள்களுக்குக் கட்டப்பட்ட கோயில்களில் முதல்கோயில் ஆதல்கூடும். தென்னிந்தியக் கல்வெட்டுகளில் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடை பதிவுபெற்ற பழங்கோயில், கூளி மஹாதாரக தேவகுல கோயில்த்துப் பகவான் நாராயன னுக்குக் கட்டி அளிக்கப்பட்ட தாலுாரத்தில் உள்ள கோயிலாம் (Ep. , nd, will P. 143). இக்கல்வெட்டு, பெரும்பாலும், கி. பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. காஞ்சீபுரத்தில் எண்ணற்ற கோயில்கள். விஷ்ணுவுக்குப் பெரும்பாலும் சிவனுக்கும் கூடக் கட்டப்படுமளவு, காஞ்சீபுர மாவட்டம் அப்பழைய பல்லவர் காலத்திலேயே ஆரிய மயமாக்கப்படுவது, தெளிவுறத் தெரியுமளவு முழுமை பெற்றுவிட்டது. கரிகாலன் பொன் வேய்ந்த கோயில், சிவன் கோயிலா, விஷ்ணுகோயிலா என்பதை உறுதி செய்ய எந்த வழியும் இல்லை. . - * - கரிகாலன் வாழ்க்கை ஆற்றிய பெரும்பணிகள் பற்றி இதுகாறும் கூறியவை, அவன் காலப் புலவர்களாலும், அவன் காலம் தொட்டு வழங்கி வந்து, பின்னர் எண்ணற்ற கல்வெட்டுகளில் இடம்பெற்றுவிட்ட மரபுவழிச் செய்தி களாலும் உறுதி செய்யப்பட்டனவாம். இனி, பிற்காலப் புலவர்கள் கூறிய செய்தி விளக்கங்கள், கரிகாலன் காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராய பரணர், அக நானூற்றில் தொகுக்கப்பட்ட ஒரு செய்யுளில், அவ்வரசன், வெண்ணியில் மேற்கொண்ட முதல் போரை விளக்கி,