பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250. தமிழர் வரலாறு குறுநிலத் தலைவர்களின் தோல்வி பற்றிய செய்தியும், காதுவழிச் செய்தியின் ஒருசிறு உண்மைக்கூற்று ஆகும். இப்போர் பரணரால் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது. "சிறந்த வளம் கொழிக்கும். கரிகால்வளவன்முன் நின்று போரிடமாட்டாது, வாகைப் பறந்தலை என்ற போர்க் களத்தில், அவன் வெற்றிபெறத் தங்கள் ஒன்பது வெண் கொற்றக் குடைகளையும் நல்ல பகற்பொழுதிலேயே களத்தில் கைவிட்டுவிட்டு ஓடிவிட்ட பெருமையில்லாத அரசர்கள்". "பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் குடா வாகைப் பறந்தலை, ஆடுபெற, ஒன்பது குடையும் நண்பகல் ஒழித்த பீடில் மன்னர்". - அகநானூறு : 1.25, 18 - 21. வாகை எனும் சொல், ஒரு மலரையும் குறிக்கும். ஒர் இடத்தையும் குறிக்கும். ஆகவே, குடும் வாகைமலரின் வேறுபடுத்தி, வாகை எனும் இடத்தை உணர்த்தச் சூடா வாகை என்ற சிலேடை வழங்கப்பட்டுளது. கரிகாலன் பற்றிய பழங்கதைகள் s காலப்போக்கில், நம்புதற்கியலாப் பல கட்டுக் கதைகள், கரிகாலன் பெயரை வளைத்துக் கொண்டு, இலக்கியங்களிலும் இடம் பெற்றுவிட்டன. கரிகாலன் இறப்பிற்குப் பின்னர், (எவ்வளவு காலத்திற்குப் பின்னர் என்பது சொல்ல இயலாது) இயற்றப்பட்ட கணக்கிலாக்கட்டுக் கதைகளின் களஞ்சிய மான் சிலப்பதிகாரக் காப்பியம், இந்திர விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தின்போது, காவிரிப்பூம்பட்டினத்துக் கடவுள்களுக்குப் பலிகொடுக்கும் பல்வேறு இடங்களுள், கொற்றப்பந்தர், பட்டிமண்டபம், தோரணவாயில் ஆகியன வைக்கப்பட்டிருந்த இடங்களை விளக்கிக் கூறுகிறது. இப்பகுதி, நம்புதற்கியலா வெற்றிச் செயல்கள் சிலவற்றைக் கரிகாலனுக்கு ஏற்றிக் கூறுவதால், அஃது ஈண்டு எடுத்துக் காட்டப்படுகிறது. "பரந்த இவ்வுலகில், தன்னோடு எதிர்த்துப்