பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தமிழர் வரலாறு தெலுங்குக் கல்வெட்டுக்கள், இதை மறைமுகமாகவும் குறிப்பிடவில்லை. ஆகவே, சிலப்பதிகார ஆசிரியரின் இக்கூற்று, சோழ அரசர்களுக்குச் சூரியன் வரை செல்லும் குடிவழிப் பட்டியல் உரிமை தரப்பட்ட வடக்கத்திய தேவ வீரர்களோடும், மானுட வீரர்களோடும் தொடர்பு படுத்தும் அருஞ்செயல்களும், தெய்வ வரப்பிரஸ்ாதங்களும் அளிக்கப் பட்ட காலத்திய கற்பனைக் கண்டுபிடிப்புகளாம் என்றே நான் மதிக்கின்றேன். அம்மூன்றும் பொருட்களை, அன்பளிப்பாக, யாரோ சிலரிடமிருந்து, கரிகாலன் பெற்றான் என்பது நம்பக்கூடாத ஒன்று அன்று; ஆனால், இமயம் வரை, படையெடுத்துச் சென்றான் என்பது, தெளிவாக, ஒரு பிற்காலக் கட்டுக் கதையே அல்லது வேறன்று. 轮 பிற்காலத் தமிழ்ப் பாக்களில் காணப்படும், ஒரு யானை, அவனைத் தேடிக்கண்டுபிடித்து, அரச மாலை குட்டிற்று: நெருப்பிலிருந்து தப்பித்தபோது, கால் தீப்புண் பெற்றுக் கருகிவிட்டதால், அவன் கரிகாலன் என அழைக்கப்பட்டான் என்பன போலும் கட்டுக் கதைகள், ஆராய்தற்கு அருகிய தகுதிப்பாடுடையவாம். அண்மைக்கால, இலங்கை வரலாற்றுச் செய்திப் பட்டியல்கள், கரிகாலன் கட்டுக் கதைகள் குறித்த தம்பங்கையும் வழங்கியுள்ளன. அவற்றுள் ஒன்று, அதாவது, அவன், இலங்கையிலிருந்து எண்ணற்ற அடிமைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து, காவிரிக்குக் கரை கட்டும் பணியில் ஈடுபடுத்தினான் என்பது ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. இக்கட்டுக்கதைகள், திரு டொனால்டு பெயெசெகொர (Donald Obeyesekere) என்பவரால், தம் முடைய, இலங்கை வரலாற்று வரைவு (Sketches of Ceylon's History) என்ற நூலில் ஏற்ற வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை ஈண்டு எடுத்துக் காட்டப்பெறும் "வங்க நஸிக திஸ்ய (Wankanasikatissa) என்பான் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 113 - 116) தஞ்சாவூர் அரசன், பெரும் படையோடு இலங்கை மீது படையெடுத்து, அத்தீவின் வடமேற்குப் பகுதியைப் பாழ்செய்து, அநுராதபுரம், கண்ணுக்குப் புலனாகும் வரை ஊடுருவிச் சென்று, மிகப்பெரிய கொள்ளைப் பொருள் களோடும், 12000க்குக் குறையாத சிங்களச் சிறைக்கைதி