பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II செங்குட்டுவன் காலம் : - (மறுப்பு) "கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனைத் தொடர்பு படுத்திச் செங்குட்டுவன் காலத்தை உறுதி செய்வது கூடாது. "Nor Can Senguttuvan's date be fixed by the so called Gajabahu Synchorism" என்கிறார் திருவாளர் சீனிவாச அய்யங்கார் (History of the Tamils Page : 379). இதற்கு அவர் காட்டும் காரணங்களுள் தலையாயது, கண்ணகி வழிபாடு குறித்து, உரைபெறுகட்டுரையும், வாழ்த்துக் காதையும் கூறும் செய்திகளில் காணப்படுவதாக அவர் கருதும் முரண்பாடு. - - செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுத்த விழாக்க்ாண மாளுவ மன்னன் போலும் பலவேந்தர்களோடு கயவாகுவும் வந்திருந்தான் என்கிறது. சிலப்பதிகாரம். "குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எம்நாட் டாங்கண், இமைய வரம்பனின் நல் நாள்செய்த நாளணி வேள்வியில் வந்தீகு என்றே வணங்கினர் வேண்ட" - - சிலம்பு : 30 159 - 163. ஆனால், உரைபெறுகட்டுரையோ, "அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான். - பாடிவிழாக் கோள் பன்முறை எடுப்பு" என்கிறது. .ملام