பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகால்ன் - . . . . . . 293 செங்குட்டுவன் காலம், சமயப் பூசல் இல்லாச் சமரச சமய உணர்வு நிலை பெற்ற காலம். தமிழகத்துப் பேரூர்களில், பிறவாயாக்கைப் பெரியோன், அறுமுகச் செல்வேள், வால்வளை மேனி வாலியோன், நீலமேனி நெடியோன் ஆகியோர்க்காம் கோயில்களோடு, அறவோர்பள்ளிகளும் ஒரு சேரக் கட்டியிருக்கும், சமயக் காழ்ப்பில்லா சமரச் நிலை யினைச் சிலப்பதிகாரம் உணர்த்துவது காண்க. சிலம்பு : 5 : 169-179. செங்குட்டுவன் குலவழி, சைவன்; ஆயினும் திருமாலை வழிபட வெறுப்பவன் அல்லன், சிவன்முன் சிரம் தாழ்த்தித் திருமால் சேடத்தைப் புயத்தே தாங்கிக் கொள்ளும் அவன், கற்பு நிறைமகளிர்க்குக் கோயில் கட்டி வழி பாடாற்றும் மனப்பக்குவம் பெற்றிருந்தான். ஒருதாய் வயிற்று மக்களே எனினும், மூத்தவன் செங்குட்டுவன் வைதீக நெறியினனாக, இளையவன் இளங்கோ, சமண நெறி ஏற்றான். அத்தகைய சமய ஒற்றுமையுணர்வு நிலவிய காலத்தவன் கஜவாகு, ஆகவே, பெளத்தனாகிய அவன், கண்ணகி வழிபாட்டு நெறி யினை ஏற்றிருக்கமாட்டான் என்ற வாதத்தில் வலுவில்லை. மகாவம்சம், கஜபாகு கால நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தொகுத்துக் கூறிய வரலாற்றுத் தொகுப்பு நூல் என்று கூறிவிட முடியாது. அது, ஒருசிலவற்றைக் கூறாமல் விட்டிருக்கவும் கூடும். மேலும், ஒன்று கூறப்பட வில்லை என்பதினாலேயே அது இல்லை என்ற முடிவுக்கு வருவது பொருந்தாவாதம் என்பதைத், திரு. அய்யங்கார் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார். "இருக்கு வேதத்தில் ஆலமரம் குறிப்பிடப்படவில்லை என்பதால், அவ்வேதம் எழுதப்பட்ட காலத்தில் ஆலமரம் என்பதே இந்தியாவில் இல்லை என்ற வாதம் சரியானவாதம் ஆகாது எனத் திரு. அய்யங்கார் காட்டும், திரு. பர்கிதா அவர்களின் மேற் கோளினைக் காண்க. ... . . " .. "Speaking of the argument, from silence Pargiter remarks, "one might argue, with more force, that because, the banyan, the most characteristic tree of India, is not mentioned in the Rg. Veda. there were none in India, when the hymus were composed." (History of the Tamils : Page : 124, Foot Note). r