பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 தமிழர் வரலாறு பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வில பிடவும், கொன்றையும், கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே", - நற்றிணை : 99. "பாக ! காதலியைப் பிரிந்து வந்து இப்போது வருந்து கின்ற நான், பரந்த கடலின், கரையை மோதும் பெரிய அலைகள் கொண்டு வந்து குவித்த மணல்மேட்டில், கடல் அலைகளோடு வந்து மொய்க்கும் நண்டுகளைப் பிடிக்க, தன்னிடமிருந்து வெளிப்படும் தான் செல்லுமிடமெல்லாம் iசாநிற்க, அந்நண்டுகள் ஒடுமிடமெல்லாம் தொடர்ந்து ஓடி ஓடி விளையாடிக் களைப்புற்றுப் போக, விளையாட்டில் விருப்பம் ஒழிந்து இருந்த இளையளாம் அவள்பால் சென்று, வினைமேற் செல்லத் துடிக்கும் என் உள்ளத்துக் கவற்சியைக் கூறியவுடனே பிரிவறிந்து கலக்க முற்றமையால் மறுமொழி கூற நா எழாமல் போக, அப்பிரிவினைப் பொறமாட்டாத தன் மனக்கலக்கத்தைத் தனக்கு அணித்தாக வளர்ந்திருந்த ஞாழல் மரத்துத் தாழ்ந்த கிளையில், மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்த மலர்க் கொத்தை, இளந்தளிரோடு கொய்து அவற்றை ஒரு சேரக் கசக்கிப் பிசைந்து உதிர்த்ததன் மூலம் வெளிப்படப் பண்ணி அறிவு மயங்கிவிட்ட அவள் துயர் நிலையினை அறிந் திருப்பை அல்லவோ? அறிந்திருக்கும் நீ, அத்துயர் தீர்க்க வேண்டின், அதற்கேற்பத் தேரை ஒட்டுவாயாக!" - - "அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல் எறிதிரை கொழிய எக்கர் வெறிகொள, வாடுவரி அலவனோடு ஒடுவயின் ஆற்றாது அசைஇ, உள்ளொழிந்த வசைதீர் குறுமகட்டு, உயவினென் சென்றுயான் உண்ணோய் உரைப்ப, மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறுமலர் ஞாழல் அஞ்சினைத் தாழிணர்க் கொழுதி