பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்திரையன் - 317 யான் என் பெண்மை தட்ப, நுண்ணிதின் தாங்கிக், கைவல் கம்மியன் கவின் பெறக் கழாஅ மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக், குவியினர்ப் புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன், என்ன மகன் கொல் தோழி! தன் வயின், ஆர்வம் உடையராகி, மார்பு அணங்குறுநரை. அறியாதோனே". - நற்றிணை : 94 அடுத்த செய்யுள், பிரிவால் வருத்தும் தலைவியைத் தோழி ஆற்றுவிப்பதைக் கூறுகிறது. "தண்ணிர் அறவே இல்லயாம் படி வறண்டுபோன, கடக்கமுடியாவாறு நீண்டுகிடக்கும் பெருவழியில், வெண்ணிற ஆடையை விரித்துப் போட்டாற்போல், வெயில் காய்வதால், வெப்பம், மிகுந்து, நினைத்தாலும் நடுங்கப் பண்ணும் கொடுமை வாய்ந்ததான பாலைக் காட்டைக் கடந்து சென்ற காதலன், தான் திரும்பிவரும் காலமாகத் தெளிவாகக் கூறிய பருவம் இதுவல்லவோ எனக் கேட்கின்றன; இஃது, அப்பருவம் அன்று; பருவகாலம் அன்று என்பதை மறந்து கடல் நீரைக் குடித்துக் கருவுற்றுவிட்ட கார்மேகம், அது தாங்கமாட்டாது பெய்து ஒழிய மழை பெய்து விடவே, அதைப் பருவ மழை யென்றே கருதிவிட்ட அறியாமையால், பிடவும், கொன்றையும், காந்தளும் மலர்ந்துவிட்டன. ஆகவே, அது கொண்டு, நீயும், இது கார்காலந்தானோ என எண்ணிக் கலங்கி விடாதே ; இது கார்காலம் அன்று". "நீர் அற வறந்த நிரம்பா நீளிடைத், துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின், அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர், தாம் வரத்தெளித்த பருவம் காண்வர, இதுவோ என்றிசின், மடந்தை மதியின்று மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை