பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 தமிழர் வரலாறு வெற்றி கொண்ட போர்க்களம், இது எனத் தெளிவாகக் குறிப்பிடப் படாத நிலையில், இது அவ்வரசனைப் பற்றிய பொதுவான புகழ் உரைகளேயல்லது வேறு அன்று என்றே கோடல் வேண்டும். "கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய்தனை, அவர் நனந்தலை நல்எயில்; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல் வெண்டளைக் கலிமான் கவிகுளம்பு உகளத் தேர்வழங்கினை, தின் தெவ்வர் தேஎத்து; துளங்கு இலயான், பனை எருத்தின், பாஅடியான், செறல் நோக்கின் ஒளிறு மருப்பின் களிறவர காப்புடைய கயம்படியினை." - புறம் 15 : 1.10. தலையாலங்கானத்துச் செருவென்றான் : இவ்வரசன் (முதுகுடுமிப் பெருவழுதி) இறந்த பின்னர்த் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சி புரிந்தான். பத்து புறநானூற்றுப் பாடல்களிலும், ஒன்பது அகநானூற்றுப் பாடல்களிலும், வேறுசில சிறு பாடல் களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், பத்துப் பாட்டில், மிக நீண்ட பாட்டாகிய மதுரைக்காஞ்சி, அதனினும் சிறிய பாட்டாகிய நெடுநல்வாடை ஆகிய இரு பாடல்களின் பாட்டுடைத் தலைவனும் அவன் இவன். அக்காலத்திய பாண்டிய அரசர்களின், இவனே மிகச்சிறந்த வனாதலின் போலும், இவனைப் பற்றிய பாடல்கள், இத்துணைப் பெருமளவில் கிடைக்கலாயின. இவன், நனி இளையனாக இருக்குபோது, இவன் காலத்திய சோழ, சேர அரசர்கள் இவனை எதிர்த்துப் படைதொடுத்து வந்தபோது, இவன், பண்டியர் அரியணையில் அமர்ந்தான். இவன் பகைவர்கள், "நாமோ சிறந்தவர்கள்; மேலும் அனைத்து