பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 - தமிழர் வரலாறு தடுக்கும் வண்ணம், அவற்றைச் சுற்றிக் கொட்டப் பட்டிருக்கும் ஆணிகள், தம் கால்களை உறுத்தி ஊறு விளைப்பதையும் உணர்ந்து கொள்ள இயலாவாறு, கள்ளை மிகக்குடித்து மயங்குவதற்கும், அதுவே ஏற்புடைக் காலமாம். ஆனால், பிறரால் பெரிதும் மதிக்கத் தக்க பெருமக்களும், அத்தெருக்களில் காணப்படுவர், அண்மையில் முதல் மகவு ஈன்ற இளமகளிர், ஈன்ற புனிறு தீர்த்து புனிதம் பெறக் குளத்தில் சென்று நீராடப் போவர். முதற் கருவுற்ற இளமகளிர் இனிதே மிகப்பெற்று, அவரொப்ப வாழ்வு பெறுவான் வேண்டித் தேவராட்டியைப் பணிந்து வழிபடப் புறம் போவர், நடந்தனவும், நடக்க இருப்பனவும் அறிந்து உரைக்கும் வெறியாடு வேலன் குலத்து வந்தார், காதல் நோயுற்று வருந்திக் கிடக்கும் இளமகளிர் மனைகளில் வந்து குழுமி, அந்நோய், எந்தக் கடவுளால் வந்தது எனக் கண்டு கொள்வரோ. அக்கடவுள் புகழ்பாடும் பாக்களைக் காதுசெவிடுபடப் பாடி, அக்கடவுளின் சினத்தைத் தணிவிப்பர். இவையல்லாமல், ஒவ்வொரு தெருவும், அவற்றிற்கே உரிய ஆடல்களாலும். ஆரவாரம் மிக்க களியாட்டங்களாலும் நிறைவுற்றிருக்கும். ஆடலும் பாடலும், படிப்படியாக உரம் இழந்து அடங்கிப் போகும். நடுயாமம் வரையும், இரவு இவ்வாறு கழிந்தது. சிறுகடையாளர்கள், மூங்கிலிலான படல்களைக் கால் இறக்கித் தாழ்த்திக் கொண்டு உறங்கலாயினர். இனிய தின்பொருள்களை விற்கும் எளிய வணிகர். அக்கடைகள் முன்னரே கிடந்து உறங்கலாயினர்; கூத்தாடுவாரும், வேறுபல இன்பக் களியாட்டம் காட்டுவாரும், அவ்வாறே ஓய்வு கொள்வாராயினர். அலையோசை அடக்கிய கடலே போல், மாநகரம், உறக்க மயக்கத்தால் போர்க்கப்பட்டுவிட்டது. மதுரை மாநகர், மீண்டும், கடலே போல் நிரந்தர ஓய்வு கொண்டு விடவில்லை. காரணம் : ஒழுக்க நெறி நிற்பார் உறங்கச் சென்று விட்டனர் என்றாலும், பேயும், பேய் நிகர் மாந்தரும், அணங்குகளும், தங்கள் அழிவுச் செயல்களை ஆற்றுவான் வெளிப்பட்டுவிட்டனர். நம்புலவர் ஆவியுலகக்