பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 399 நாம் சென்ற அற்றைக் காலைப்போதில் மட்டுமே நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகக் கருதி விடுவதைத் தடுப்பான் வேண்டி, கங்கைப் பேராறு, தான் கொண்டு வரும் அரும் பொருட்குவியல்களையெல்லாம் கடலில் சேர்ப்பது போல, உலகத்துப் பொருட்கள் எல்லாம், இன்று போலவே, ஒவ்வொரு நாளும், அம்மாநகருள் வந்து பாயும் என்பதையும், புலவர், சேர்த்துக் கூறியுள்ளார். ஊர்வலம், நம்மைக் கடந்து கொண்டிருக்கும்போதே, வானத்தில் ஞாயிறு எழுந்து விடுகிறான்; மதுரை மாநகரும், முன்னாள் காலையில், அம்மாநகருள் நுழைந்தபோது நாம் கண்ணுற்ற, மக்களின் ஆரவாரப் பெருங்கூட்டத்தையும், குழப்பத்தையும் மீண்டும் &srt Lá, Gorri sã15, all L_g). Madras Christian College Magazine 1901. P. 120 - 124, - புலவர்களைப் புரத்தல் : பழைய தமிழரசர்கள் பலரையும் போலவே, நெடுஞ்செழியனும், புலவர்களைப் பேணி காக்கும் மிகப்பெரிய புரவலனாவன். புகழ் பெற்ற தலையாலங்கானப் போர் நிகழ்வதற்கு முன்னர்ப் பதினெட்டு வரிகளைக் கொண்ட ஒரு பாடலை அவனே பாடியுள்ளான். அதில் அவன் இவ்வாறு கூறுகிறான், "இவன் ஆளும் நாட்டைப் புகழ்ந்து கூறுவார் நம்மால் எள்ளி நகையாடற்குரியர் என்றும், இவனோ நனிமிகு இளையன் என்றும், நான் வெறுக்கப் பழித்துரைத்து, ஒலிக்கும் மணிகள், இருபக்கமும், ஒன்றோடொன்று மாறி ஒலிக்க, எடுத்துவைக்கும் பெரிய கால்களைக் கொண்ட நெடிய களிற்றுப் படையினையும், தேர்ப்படையினையும், குதிரைப்படையினையும், படைக்கலப் பயிற்சி வல்ல வீரர்களையும் உடையேம் யாம் எனக்கூறிச் செருக்குற்று, என் பேராற்றல் கண்டும் அஞ்சாது, ஆணவம் மிகக் புல்லிய சொற்களைச் சொல்லிய அப்பகையரசர் களைப் போரில் சிதைந்தோடப் போரிட்டு வென்று, அவர்களின் போர் முரசுகளோடு அவர்களையும் கைக்கொள்ளேனாயின், என்குடை நிழற்கீழ் வாழும் என் நாட்டு மக்கள், தாங்கள் வாழத் தகுதி வாய்ந்த நிழல்தரு நிலம்