பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 - தமிழர் வரலாறு 21ஆம் பாட்டின் முதல் இருவரிகள் அரசர்களின் நல்லாட்சிக்கு, ஐம்பெரும் துணைகளாக, சொல்இலக்கணம் பொருள்இலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய ஐந்திணைக் குறிக்கின்றன். "சொல், பெயர், நாட்டப், கேள்வி நெஞ்சம் என்று ஐந்து" - பதிற்று : 21 : 1 - 2. சேர அரசர்கள், ஆண்டாண்டு காலமாக நிலைபேறு கொண்டிருந்த பழம்பெரும் மரபுகளை உடைத்து உட்புகுவதற்கு வேண்டுமளவு, ஆரிய மயமாக்கப்பட்டு விட்டனர். ஆனால், அதே நிலையில், ஐம்பெரும்துணைகள், சமஸ்கிருத்தின் தனித்ததமிழ் மொழிபெயர்ப்புச் சொற் களாலேயே அழைக்கப்பட்டுள்ளன. அவற்றுள்ளும், "நாட்டம்" "கேள்வி" ஆகிய இருசொற்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன என்பதை நோக்க மொழியாட்சி நிலையில், பழைமை போற்றும் உறுதிப்பாடு இன்னமும் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தது என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. அக்காலகட்டம், ஒன்றிலிருந்து ஒன்றிற்கு நிலைபெயரும் ஒன்றாம் என்பதைக் காட்டும் வகையில், அரசர்களின் உள்ளங்களிலிருந்து பண்டைமரபுகள் மெல்ல மெல்லப் பிடிப்பிழந்து போகப் பிராமணர்களின் போதனைகள் வலுவாக இடம் பெறலாயின. அரசின் ஒழுக்க நெறிகளைக் காக்கும் காவலர்களாகப் பிராமணர்கள் உயர்வு பெற்று விட்டனர் என்பது, "மறை ஒதுதல், வேள்விவேட்டல், அவை இரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியார்க்கு ஈதல், பிறர் தமக்குக் கொடுப்பதை ஏற்றல் என்ற ஆறு தொழில்களையும் செய்து ஒழுகும், எக்காலமும் அறநூற் பயனையே விரும்பும் அந்தணர்களை வழிப்பட்டு ஒழுகி” என அரசர்கள் புகழ்ப் படும் அப்பாடற் பகுதியால் உறுதி செய்யப்பட்டுவிட்டது : "ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி" - பதிற்று : 24 : 6-8.