பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் - 35 விட்ணுவின் அவதாரங்களாகக் காணப்படுகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், அதே சமயம் அவ்விருவரும் மானிட வீரர்களாகவே, நம்முள் வருகின்றனர்; அவ்விரு வீரர்களும், தெய்வத் தலைமையினைச் சிறிதும் பயன்கொள்ளாமல், மானிடக் கோட்பாடுகள்படியே நடந்து காட்டும், சிறந்த வாய்ப்பினைப் பெற்ற மனிதர்களாகவே, பெரும்பகுதி காட்டப்படும் வகையில், அவ்விரு நிலைகளும் (தெய்வநிலை, மானிட நிலை) வேறு பிரிக்க இயலாவாறு இரண்டற இணைக்கப்பட்டுள்ளன. தெய்வத் தன்மையை வற்புறுத்த வேண்டி இணைக்கப்பட்ட இன்றியமையா ஒரு சில இடங்களில் மட்டுமே, அவர்கள், விட்ணுவின் இயல்புகளை மேற்கொள்கின்றனர். இவை போலும் பிற்காலத்தில் இடைச் செருகல்களையும் இப்பகுதிகள் பல்வேறு இடங்களில் அறிவுக்குப் பொருந்தா நிலையில் துழைக்கப்பட்டிருப்பதையும் நினைவுகோடல் இன்றி, அவை எவ்வாறு ஏனைய விளக்கங்களோடு தொடர்பு இன்றி இணைக்கப்பட்டுள்ளன என்பதையும், அதன் வளர்ச்சிக்கு, அவை, எவ்வாறு தேவையற்றன என்பதையும் உற்று உணராமல், இவ்விரு நூல்களையும் கருத்தோடு படிப்பது இயலாது" எனக் குறிப்பிடுகிறார். இராமாயணத்தின் மொழி நடை, அப்பாடல்கள் இரு வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டவை என்ற எண்ணத்தை அளிப்பதாக இல்லை. ஆனால், இக்கருத்து இரண்டாவது வால்மீகி அவர் காலத்தில் வழக்கிலிருந்த மொழி நடையில் எழுத விரும்பியிருந்தால், அப்பாடல்களைத் தொடக்கத் திலிருந்து புதிதாகவே பாடியிருக்க முடியும் என்பதை நினைவில் கொண்டால் மறுக்க முடியாத தடையாக நிற்காது. மற்றொரு இராமகாதை இராமகாதை, பெரும்பாலும் அனைத்துச் சிற்றுார்களிலும் நாள்தோறும், பண்டிதர்களாலும், இசையொடு கலந்து கதை கூறுவோர்களாலும் விரித்துரைக்கப்படுவதால் அக்கதை அதன் முழு விளக்கங்களோடு, இன்றைய இந்தியாவின்