பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 தமிழர் வரலாறு இலாச் சொல் வழங்கும் யவனர்களைச் சிறை கொண்டு, அவர்தம் கைகளைப் பின் புறமாகப் பிணித்து, அவர்தம் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்பால் இருந்து அரிய நன்கலன்களோடு வைரங்களையும் கைக்கொண்டான்" என்றெல்லாம் அது கூறுகிறது. புலவர்களின் கற்பனை வளம், வரலாற்றோடு வருந்தத் தக்க விளையாட்டை உண்மையில் விளையாடிவிட்டது. "அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து, இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇத், தகைசால் சிறப்பொடு பேரிசை மரவின் ஆயர் வணக்கி, நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்தலைப் பெய்து கைபின்கொளி.இ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு" - பதிற்று : இரண்டாம்பத்து : பதிகம். 62, 63 மற்றும் 368 எண்ணிட்ட புறநானூற்றுப் பாடல்களில் கொளுக்கள், அம்மூன்று பாடல்களும் ஒருவரோடொருவர் போரிட்டு, இருவருமே போர்க்களத்தில் உயிர்துறந்து போன சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதனையும், சோழன் வேற்பஃறடக்கைப் பெரு நற்கிள்ளிளையும் பாடுவனவாகக் கூறுகின்றன. இந்நெடுஞ் சேரலாதன், குட மாநிலம் ஆளும் அரசனாம் குடக்கோ எனப்படுவதால், இவன், பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவனின், வேறுபட்டவனாவன் என்பது தெளிவு, ஆனால், அக்கொளுக்களில் உள்ள குறிப்பு நம்பக் கூடியதா என்பது ஐயப்பாட்டிற்கு உரித்து. - தமிழ் அரசர்கள், ஆரியர்களோடு நடத்திய போர்கள் மீதான, வரம்பிலாப்பொருளில் கூற்று : சேரலாதன், பனவாசி அல்லது கொண்கானத்து ஆரியர்களோடு நடத்திய போர்கள் அல்லாமல், பிற்காலப்