பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 தமிழர் வரலாறு வடுகர் என்பார் தமக்குத் துணையாக முன் வரிசையில் வர, மோரியர் என்பார் தென்னாடுகளைக் கைப்பற்ற எண்ணி வந்த படையெடுப்பின்போது, வானளாவ உயர்ந்த பணி படர்ந்த பெரிய மலைகளில், பேரொளி வீசும் தேர்ச்சக்கரங்கள் தடையின்றிச் செல்லப் பிளந்து வழியாக்கிய மலைப்பாறை" - "ஒல்கியல் மடமயில் ஒழித்த பீ வான்போழ் வல்வில் சுற்றி, நோன்சிலை அவ்வார் விளிம்பிற்கு அமைந்த, நொவ்வியல் கனைகுரல் இசைக்கும் விரைசெலல் கடுங்கனை முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பணிஇரும் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி உருளியகுறைத்த அறை" - - அகம் : 281 : 4 - 12, கோசர் ஈண்டு, வடுகர் என அழைக்கப்பட்டுள்ளனர்; வடநாட்டவர் எனும் பொருள் உடையதான வடுகர் என்ற அச்சொல், தமிழ்நாட்டிற்கு வடக்கே வாழ்ந்த, தெலுங்கர், கன்னடவர், துளுவர் ஆகியவர் போலும் அனைத்து மக்களையும் குறிக்க வழங்கப்படும். மோரியரைக் குறிப்பிடும் கடைசிப் பாடற்பகுதி புறநானூற்றில் காணப்படுகிறது. அது இவ்வாறு கூறுகிறது. "வெற்றிதரும் வேற்படையினையும், வானளாவ உயர்ந்த நெடிய குடையினையும், கொடியணிந்த தேரினையும் உடைய மோரியர், திண்ணிய ஆரக்கால் சூழ்ந்த சக்கரம், நன்கு இயங்குதற்பொருட்டு, வெட்டிக் குறைக்கப்பட்ட, உலக எல்லைக்கு அப்பாற்பட்ட இடத்திற்குச் செல்லும் இடைவழி' - "வென்வேல், - - விண்பொரு நெடுங்குடை கொடித்தேர் மோரியர்