பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 46] மாமூலனார் பாடிய திதியன் அன்னிமிஞரிலியின் துயர் துடைத்தோனாகப் பரணரால் பாராட்டப்பெற்ற அழுந்துர்த் நிதியனே ஆயினும், எவ்வி அடக்கவும் அடங்காது வந்து புன்னையை வெட்டி வீழ்த்திய அன்னியை வெற்றி கொண்டவனாக, நக்கீரராலும், வெள்ளி வீதியாராலும், கயமனாராலும் பாடப்பெற்ற, குறுக்கைப் பறந்தலைப் போர்த் திதியனே ஆயினும், மாமூலனார் பரணர்காலத்தும், நக்கீரர் காலத்தும் வாழ்ந்த முதுபெரும் புலவரே ஆவர். 9) நன்னன் . நன்னனுக்கு உரியது பாழி; அது பிறர் அணுகலாகாக் காவல் அமைந்தது. "நன்னன் பாழி அன்னகடியுடைவியன் நகர்" (அகம் : 15 : நன்னன், வேளி: வழி வந்தவன்; வியலுர்க்கு உரியவன். "நன்னன் வேண்மாள் வயலைவேலி வயலுர்" (அகம் : 97) . நன்னன் ஏழிற் குன்றத்துக்கும் உரியவன். "நன்னன் நன்னாட்டு ஏழில் குன்றம்” (அகம் : 349). நன்னனைக்குறித்து மாமூலனார் கூறுவன இவை. நன்னன் வேளிர் வழிவந்தவன்; அவனுக்குரிய பாழி, அரியகாவல் உடையது; அதனால், வேளிர், தங்கள் பொற் செல்வங்களை, அப்பாழிக்கண் வைத்துக் காத்து வந்தனர்." நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஒம்பினர் வைத்த பொன்", "பாழிஆங்கண், வேண்முது மாக்கள் வியன்நகர்க் கரந்த அருங்கல வெறுக்கை" (அகம் : 258 : 372). பாழி நகர்மீது போர்தொடுத்து வந்த, தேர்ப்படை முதலாம் படைவலம் மருந்த மிஞரிலி என்பானைத் தன் பொருட்டு எதிர்த்துப் போரிட்டு உயர்நீத்த தன் நண்பன் ஆஅய் எயினனின் உடலைக் காணவும் வராது ஒளிந்து கொண்டு, பழி கொண்டான் நன்னன். "ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, இழையணி யானை இயல்தேர் மிஞலியொடு, நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென................. நன்னன் அருளான் கரப்ப" (அகம் : 208).