பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் - 39 இராமாயணத்தின் இப்பகுதி, இராமர் காலத்தில் ஆரிய வழிபாட்டு முறைகளுக்கு, ஆரியரல்லாதாரின் கடும் வெறுப்பை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த ஆரியல்லாதார், சமஸ்கிருதம் பேசமாட்டார். வேதத்தில், அவர்கள் "மரித்ஹர வா" நலங்கெட்ட பேச்சாளர் என்றும், "அனாஸ்" வாயற்றவர் அல்லது நல்ல பேச்சு அற்றவர் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். "அனாஸ்" என்ற சொற் றொடர் ஐரோப்பிய ஆசிரியர்களால் முக்கற்றவர் எனத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, தஸ்யூக்களின் தட்டை மூக்கைக் குறிப்பதாகவும் கொள்ளப்பட்டது. இச்சொற்கள் அரக்கர்கள், ஆரியர் பேசிய மொழியிலிருந்து வேறுபட்ட ஒரு மொழி பேசினர் என்ற உண்மையை உணர்த்துகின்றன. இல்வலன் என்பான் ஓர் அரக்கன் பிராமணன் போல மாறுவேடம் கொண்டு உண்மையில், தன்மொழி அல்லாததான சமஸ்கிருதம் பேசிப் பிராமணர்களை ஏமாற்ற முயன்றான் எனக்கூறுவதன் மூலம் இராமாயணம், இதை மேலும் உறுதி செய்கிறது. இப்பாட்டில் வரும் இதுபோலும் குறிப்பிடத்தக்க பிறதொரு குறிப்பு, ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்கும் இடையில், ஈமச்சடங்கு முறையிலான குறிப்பிடத்தக்க வேறுபாட்டினை உணர்த்துகிற, ஆரியரின் தீ ஓம்பல் வழக்கம் தோன்றுவதற்கு முன்னர்ப் பிணங்களை இயற்கையின் செயலாண்மையின் அழிக்கும் ஆற்றலுக்கு ஆளாக்கிடும் நனிமிகப்பழைய வழக்கம் நிலைபெற்றிருக்கும் இடங்கள் தவிர்த்து, உலகம் முழுவதிலும் புதைப்பதே, இறந்தவர் உடலுக்கு முடிவுகாணும் சாதாரண முறையாகும். தீவழிபாட்டு முறை, எரியூட்டல் வழக்கத்திற்கு - அதாவது இறந்தவரைத் தீ மூலம் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கத்திற்கு வழிவகுத்தது. இந்தியாவிலும், வேறு இடங்களிலும் எரியூட்டல் முறையின் நுழைவு, ஆரிய வழிபாட்டு முறை பரவியதன் உறுதியான அறிகுறியாம். அரக்கர்கள் ஆரியரல்லாதாராதலின் தங்களுடைய இறந்தவர்கள் உடல்களைப் புதைத்தனர். ஆகவே விராதன் இராமனால் கொல்லப்பட்ட போது புதைப்பது இராக்கதரின் பண்டைய வழக்கமாதலின் தன் பிணத்தைப் புதைத்து