பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழர் வரலாறு புதிதாக மனம் கொண்ட பாண்டவர்களின் மனைவி, திரெளபதி, யுதிஷ்டிரர் தொடங்கி, ஆண்டுக்கு ஒருவரோடு வாழவேண்டும் என்ற முறை ஏற்பட்டவுடனே, அர்ஜுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அத்தீர்த்தயாத்திரையின் போது, மணிபுர மன்னன் சித்ரவாகனன் மகள், சித்ராங்கதாவை மணம் செய்து கொண்டான். மகாபாரதம் : 7 , 11 : 3986, 1 : 215 : 7826 மணி என்ற சொல், தமிழில் நீலமணியைக் குறிக்கும். பழைய சமஸ்கிருத இலக்கியங்களும், பழைய கரலவேலக் கல்வெட்டுகளும், பாண்டிய நாட்டு நீலமணியைப் பேசக் கேட்டுள்ளோம். ஆகவே, மணிப்பூர் என்ற பெயர், அம் மணி கிடைக்கும் பாண்டியர் தலை தகர்க்குப் பொருந்திய பெயரே). அப்பெருங் காப்பியத்தின் தென் இந்தியப் பதிப்புகளில், அப்பெயர் "மனலூர்" எனக் குறிப்பிடப்பட்டுளது. ஆக, மனலூர் என்பது உண்மையில் தமிழ்ப்பெயரே, பிறிதோர் இடத்தில் (ஆதிபர்வம்: 6:1; 64). அர்ச்சுனனின் இம்மனைவி பாண்டவ அரசகுமாரியாகக் கூறப்பட்டுளது. சித்ராங்கதாவை மனம் செய்துகொள்ளுமுன், அர்ச்சுனன், உலூபி என்ற நாகக் கன்னிகையை மணந்து கொண்டான். (மகாபராதம் :1; 214 : 7810) தன்னுடைய தீர்த்தயாத்திரையின் போது, அர்ச்சுனன் சென்ற இடங்கள், சீதையைத் தேடிவருமாறு தன் வானர வீரர்களைச் சுக்கீரீவன், பெரிய குழப்ப நிலையில் பணித்தது போன்ற குழப்பநிலையில், நிலவியல் சார்ந்த நிலைமகளுக்கு மதிப்பளிக்காமலே குறிப்பிடப்பட்டுள்ளன. அவன் மணந்துகொண்ட உலூபி, கங்கைக்கரையில் அர்ச்சுனன் முன் திடுமென வந்து நிற்குமாறு செய்யப் பட்டாலும், அவள் பாண்டி நாட்டிற்கு அணித்தாக உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவனே ஆவள். - . . . நாகர்கள் குறித்த மற்றொன்று விரித்தல் : புராணங்கள், நாகர்களைப் "பாதாள" த்தில் வாழவைக் கின்றன. ஆரியவர்த்தத்தின் மையப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள நாடு எதுவும் பாதாளம்தான். இன்று,