பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு :-

சேர, சோழ, பாண்டிய அரசுகள், இராவணன் ஆட்சி அழிவின் விளைவாகப் பெரும்பாலும் இராமாயண காலத்திற்குப் பின்னரே தோன்றியிருக்க வேண்டும் ? -

தமிழர் வரலாற்று நூலாசிரியர், திருவாளர், பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் கொண்ட முடிவு இது. The three ancient powers of sola, sera, pandya rose, probably, as a result of the extinction of Ravana's rule, after the age of Ramayana”. (History of the Tamils; (Page : 54)

என அவர் கூறுவது காண்க:

இதே கருத்துப்பட, வேறு சில இடங்களிலும் அவர் பின்வருமாறு கூறியுள்ளார். சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று பெரும் அரச இனங்களின் தோற்றம், தென்னிந்தியா, இராமனால் அமைதிப்படுத்தியதன் அரசியல் விளைவே என நாம் யூகிக்கலாம். இம் மூன்று பெயர்களும் இராமாயணத்தில் இடம் பெற்றிருந்தாலும், புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று இராவணன்களின் ஆட்சிக் காலத்தில், அச் சேர, சோழ, பாண்டிய அரச இனங்கள் செல்வாக்குப் பெற்றிருக்க மாட்டா, என்பது உறுதி. இந்த இராவணன்கள், தென்னிந்தியா முழுமையும் தன்னேரில்லா அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கோதாவரி ஆற்றங் கரையிலானதான ஜானஸ்தானம், மூன்றாவது இராவணன் காலத்தில், அவன் ஆட்சியின் எல்லைக் காவல் நிலையமாக இருந்தது. அவன் குடிமக்களாம் அரக்கர்கள், விந்தியத்தின் தென்பால் உள்ள இந்தியா முழுவதும் திரண்டு கிடந்தனர். ஒரு சிலர், அவ்வப்போது ஆரிய வர்த்தத்துள்ளும் புகுந்து வாழ்ந்தனர். அவன் ஆட்சி நிலவும் எல்லைக்குள், வேறு அரச இனங்கள், ஆட்சி மேற்கொண்டிருந்தன என்பது: