பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழர் வரலாறு

மேலும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டிலும் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டுவிட்ட வேறு ஒரு அகஸ்தியர் காலத்துப் பாவலன் யாரோ ஒருவனால் நுழைத்துவிடப்பட்ட இடைச்செருகலாம். என்று கூறிவிடுவார் திருவாளர் பி.டி.எஸ். அவர்கள். (Agastyas asramam during the whole period of the wanderings of Rama was two yojanas from panchavadi ; yet. when Sugriva, sent his vanaras tò the south to search for sita, he told them, that they would see kaveri's stream whose waters were holy, benign and bright; Near by they the would see Seated on the top of Malaya Hill, brilliant as the sun Agasiya, the excellnst Rishi. Here we see Agastya spirited away by the poet, as sita was by Ravana, from Panchavadi, and dropped on the top of the Malaya Hill. Hence this must have been inserted by the later poet who lived after the Agasty as had proceeded further south than the Agastya of Rama s time and settled in the Tamil Country”. Page-55) என அவர் கூறுவது காண்க.

பாண்டிய அரச இனம் இராமாயணத்தில் குறிப்பிடப் படவில்லை. ஆகவே, பாண்டிய அரச இனம் இராமாயண காலத்தில் உருப்பெறவில்லை என ஒரிடத்தில் கூறிவிட்ட திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், பிறிதோரிடத்தில் வால்மீகி இராமாயணப் பிரதி ஒன்றில் சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணும் நிலையில், அக்குறிப்பீடு, அக்கதையில் கி. மு. முதலாம் ஆயிரத்தாண்டில் எழுதப்பட்ட இராமாயணத்து இரண்டாம் பிரதியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். -

(The reference to the Pandyas or all the three in the Ramayana must have been put into the story in the second draft of the poem in the first millennium B. C. Page-54) எனக் கூறுவதும் காண்க