பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

முற்பட்டதான ஒரு காலத்திற்குள் பின் நோக்கிச் சென்று, இந்தியர்கள், அந்நனி மிகப் பழங்காலத்தில் நடத்திய வாழ்க்கைக் காட்சியை-மின்னலின் ஒளிக்கீற்றுகள் போல், அங்கு மிங்குமாகக் காணக்கிடைக்கும் காட்சியைப் பெறலாம். நனிமிகப் பழங்காலத்தை, இவ்வாறு நுழைந்து பார்ப்பதன், மூலம், தென்னிந்தியர்களின் கி. மு. 2000 அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து வாழ்க்கை நிலையினைக் கண்ணெதிர் காணலாம் போல் காணலாம். அவ்வாறு செய்வதற்கு முன்னர், அந்நனி மிகச் சேய்மைக் கண்ணதாய பழங்காலத்தில், வளர்ச்சி வேகம், வானூர்தி, கம்பியில்லாத் தந்திகளின் காலமாம் இன்றைய வளர்ச்சி வேகத்தினும், மிக மிகக் குறைவு என்பதை நினைவு கொள்ளுதல் வேண்டும். இன்றைய வாழ்க்கையின், மூச்சு விடுவதற்கும் இடைவெளியில்லா விரைவான மாற்றமும், வழுக்கும்பனிப்பாறைகளின் ஆறுபோலப் புலனாலும் உணர்ந்து கொள்ள இயலாப் பண்டைய நாட்களின் மெதுவான சிந்தனை செயல்பாடுகளும், இரு கோடித் துருவங்கள் போலும் வேறுபாடுடைய. ஆகவே, கி. மு. 2000ல் எது உண்மையோ அதுவே அதனினும் நனிமிகப் பிற்பட்ட பழங்காலத்திலும் உண்மையாம்"

From these conventions we can go back in imagination to the ages when the Poems sung by bards, faithfully reflected the life, which people actually [ed. From this age we can go back to the age before the rise of poetry and get a glimpse of the life which Indians led in the very remote past. Peeping thus into the Far past, we can Viswalise the life of the South Indians about 2000 B. C. or earlier. Before doing so, we ought to remember that progress in remote antiquity was much slower than in present days of wireless telegraphy and the aeroplane. The breathlessly hasty changes of our present day life and the slow movement, imperceptible as that of glacier, of life and thought in ancient days are poles apart, Hence what was true of 2000 B.C. was equally true of much earlier times” Page 64.