பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.மு. இரண்டாவது ... தமிழர் நாகரீகம் 109

  தமிழ்க் கவிதை உலகின் ஆட்சி 

எல்லைக்குள் அவல நிகழ்ச்சி எனப்படுவன, தடை செய்யப்பட்ட ஒன்று, ஆகவே, பழந்தமிழர் மனப்போக்கு தாங்கிக் கொள்ளக்கூடிய துன்பியல் பாக்களின் மிக நெருங்கிய அணுகு நிலை இவ்வளவே.

   முடிவாக, முறையான திருமணம், அத்திருமண உறவைத் தொடர்ந்த அன்பு வாழ்க்கையாம் கற்பு நெறி, அதன் பாதையில் முள் உறுத்தும், பரத்தையர் ஒழுக்கத்தால், மனை வாழ்க்கையின் சீர்கேடு, அதன் விளைவாம், மனங்கொண்ட காதலரிடையே ஊடல், அவ்வூடலைத் தொடர்ந்து வரும் மகிழ்ச்சி தரு கூடல் ஆகியவை, ஆற்றுப் பள்ளத் தாக்குப் பாடல்களாம், மருதத்திணைப்பாக்களின் கருப்பொருள்களாம். நீர் நிறைந்த நெல்வயல்களில் சில மாதக் கடின உழைப்பை அடுத்து, நெற்கதிர் முற்றும் பருவத்திலும், நெல்மணிகள், களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டு உழவிற்குப் பக்குவப்பட்டுக் கிடக் குமாறு நிலம், ஓய்வுக்கு விடப்பட்ட பின்னரும், இயல்பாகவே திணிக்கப் பட்ட ஓய்வு தொடர்ந்து கிடைக்கும் உழவுத் தொழில், நட்பைப் பெறும் நிலப்பகுதியில், நாகரீகத்தின் மெருகேற்றும் மலர்ந்து வளர்ந்ததை உணர்ந்து கொள்வது எளிது; இவ்வாய்வுப் பருவத்தில், காதலர்களின் ஊடலும், இன்ப லீலைகளுமே, கிடைக்கக் கூடிய இன்பப் பொழுதுபோக்குகளாகும்.

நில இயல்புக்கு ஏற்ப அமையும் போர்ப்பாடல் மரபுகள்:

   காதல் அல்லாமல், பாக்களின் மற்றொரு கருப்பொருள் போர். குறிஞ்சி நிலத்தில், போர், வெட்சி எனப்படும் ஆனிரை கவர்தலில் அடங்கியிருந்தது. ஆனிரை கவரப் படையெடுத்துச் செல்வார் வெட்சி மலர்களால் ஆன மாலை அணிந்து கொள்வர் ஆதலின், அப்போர், வெட்சி என அழைக்கப்பட்டது. கவர்ந்து சென்றாரிடமிருந்து ஆனிரை களை மீட்டுக் கோடல், அது போலும் ஒரு காரணத்தால், கரந்தை எனப் பெயரிடப்பட்டது. அடுத்து இருந்த காட்டு நிலம், தற்காப்புப் போர் நிலையில், இயற்கை முதல்தரமாக