பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழர் வரலாறு

கூட்டம் புடைசூழ, அவன், அல்லது அவன் பக்தன், இன்றைய ஆயர்களைப் போலவே, எளிதில் பொருள் விளங்காப் பல்வேறு ஆடல்களை மேற்கொள்வர், பால், பால்படு பொருள்கள், சில சமயம், இவற்றொடு கலந்த சோறு, அவன் படையல்களாம்.

மீண்டும் கூடலால் பிறக்கும். இன் பத்தைப் பெரிதாக்கவே உதவும், காதலர்களின் சிறு பிரிவுக்கான வாய்ப்பினை அளிக்கிறது ஆணிரை மேய்க்கும் வாழ்க்கை. ஆதலின், காதல் இன்பத்தை விருப்பம்போல் நுகர, வேட்டையாடும் வாழ்க்கையிலும், ஆனிரை மேய்க்கும் வாழ்க்கை, பெரிதும் துணை நிற்கின்றது. வேட்டையாடுவான் போலவோ, எதிர்பாரா இன்னல்கள் நிறைந்த, நெடுந் தொலைவு கடல் மேல் செல்லும் வாழ்க்கை உடையவரைப் போலவோ அல்லாமல், ஆனிரை மேய்ப்பவர், காட்டில் ஓய்வாக இருந்து ஆனிரை ஓம்புவதில் ஈடுபட்டுள்ளமையால், அவர் வாழ்க்கையே மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாம், ஆகவே தான் ஆனிரை ஓம்புவாரின் கார்மேனிக் கடவுளும், இந்தியக் கடவுள் களனைத்திலும் மகிழ்ச்சியால் நிறைந்த கடவுளாவன்.

கடற்கரையைச் சார்ந்த நிலத்துத் தெய்வம், அச்சமூட்டும் கடல் தலைவர் ஆவன், கரிய மேனியராகிய ஆடவரும் மகளிரும், இடுப்பில் தங்கள் குழந்தைகளோடு கடற்கரைக்கண் திரண்டிருந்து, அன்று பிடித்த புத்தம்புதிய அல்லது உப்பிட்டு உலர்ந்த மீனையும், ஊனையும் அக்கடல் தெய்வத்துக்குப் படைக்கும் மீனவ வழிபாட்டாளர்களின் வழிபாட்டுச் சடங்குகளில், அக்கடற் கடவுளின் அடையாளமாகக் கொடிய சுறா மீனின் கொம்பு அமையும், காதல் இன்பம், மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை. கழி நீரில் படர்ந்திருக்கும் அல்லி மலர்களை, அவற்றின் மீதுற்ற ஆசையால் அணிந்து கொண்டு தங்களை ஒப்பனை செய்து கொள்ளும் கரிய மேனியராகிய மீனவ இன மகளிரின், நன்கு வளர்ந்த உடல் உறுப்புகள், மீன் முடை நாறும் நிலையிலும், அவர்களின் இல்லத்து ஆடவர் கடல்மேல் செலவு குறித்துப் போய்விட்ட