பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தமிழர் வரலாறு

சொற்கள் தோகை, அகில் என்ற தமிழ்ச்சொற்களின் திரிபாம் என்பதையும், தமிழ்நாட்டு மெல்லிய ஆடை, கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பாலஸ் தீனத்திற்குச் சென்றதையும், அதைக் குறிக்கும் “சிந்து” என்ற அம்மொழிச்சொல், “சிந்து” என்ற தமிழ்ச் சொல்லே என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார் திருவாளர் சீனிவாச அய்யங்கார் என்பது உறுதியாகிறது.

திரு. பி. டி. எஸ். அவர்கள் ஒப்புக் கொண்டு கூறும் வேறு ஒருவரலாற்றுச் செய்தியையும் ஈண்டுக் குறிப்பிடல் நலம்,

வேத காலம் ஏறத்தாழ கி. மு. 3000இல் தொடங்கியதாகவும், அது, ஒவ்வொன்றும் 500 ஆண்டுகளைக் கொண்டதான மூன்று யுகங்களை உள்ளடக்கியதாகவும் நான் கருதுகின்றேன்...... ஸ்ரீராமச்சந்திரன், வேத காலத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாவது பகுதியில் இருந்தார். ஆகவே, அவருடைய காலம் கி. மு. 2000 எனக் கருதுகின்றேன்...... ஸ்ரீராமருக்கும், ஸ்ரீகிருஷ்ணனுக்கும் இடையில் கடந்துபோன காலம் 500 ஆண்டுகள் என்பது ஒரு நல்ல மதிப்பீடு. இது, வேதகாலத்தின் முடிவுக்கு நம்மைக் கொண்டு சேர்க்கிறது.

“I assume the vedic period to have begum circa 30000 B C, that period extended over three yugas of five centuries each. Ramachandra lived at the end of the second third part of the Vedic age. Hence I assume his date to be 2000 B.C.,........Five hundred years is a fair estimate for the length of time that lapsed between Sri Rama, and Sri Krishna. This brings us to the end of the vedic period”. History of the Tamils. Indroduction. P. 57)

ஆக, கி. மு. 3000 தொடங்கி, கி. மு. 1500 வரையான காலம், வேதகாலம் என்பது, திருவாளர், பி. டி. எஸ் அவர்களின் கருத்தாம் என்பது தெளிவாயிற்று.

"கி. மு. 3000 முதல் கி. மு. 1500 வரையான காலமாகக் கருதப்பட்ட வேதகாலத்தில், தென் கோடித் தமிழகத்தின் வினைபடுபொருளாம் முத்து, வடஇந்திய ரிஷிகளால்,