பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

தமிழர் வரலாறு

கொண்டுவந்து வைத்துப் பூசை செய்யலாம். சிவன்டியார்கள் வரலாறு கூறும் தமிழ்ப் பெரிய புராணம், கோயில்களில், சிவனை வழிபட்ட, இழிகுலத்துச் சைவ அடியார்களைக் குறிப்பிடுகிறது. காளத்தித் திருக்கோயிலில் உள்ள சிவனுக்குக் கண்ணப்ப நாயனார், இறைச்சி உணவைப் படைத்துள்ளார். வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவரான, பெரும்பாலும் கி. பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணன், சிரங்கம் திருக்கோயிலைச் சூழ உள்ள தெய்வத் திருமண்ணில் நடப்பதற்கும் தகுதி அற்றதாம் அளவு இழிவுடையவாகக் கருதப்படும், கால்களைக் கொண்ட இழிகுலத்தவராகக் கருதப்பட்டவர். ஆகமங்கள், நான்கு சாதிக் கொள்கையை ஏற்கவில்லை. ஆனால், உண்மையில் வேதத்தின் ஒரு பகுதியாகிய வேதாந்தம், சூத்திரர்களுக்குக் காட்டப்படாது மறைக்கப்பட்ட ஒரு நூலாகும். இதை உறுதிப்படுத்தும், ஒரு தனிப் பிரிவையே “பாதராயணம்” கொண்டுளது. காரணம், சூத்திரர்கள், தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும், சடங்கு நெறிகளுக்குத் தகுதியடைததவரல்லர், ஆகவே, அவர்கள், வேதங்களை, ஒதவும் கேட்கவும் விலக்கப்பட்டனர். [வேதம் : சூத்திரம், 1 : 3 35-38] ஆகமங்கள் இதற்கு மாறாக, அனைத்து மக்களுக்கும் உரிமையுடையவாம். அதன் படி இன்றும் சிவ தீஷை பெற்ற ஒரு பறையன், அத் தீகூைடியைப் பிராமணன் ஒருவனுக்குக் கொடுத்து, அப்பிராமணனுக்குக் குருவாகவும் ஆகலாம். ஆகம நெறியாளர்களிடையே சந்நியாச நிலைகளும் பரவலாயின. வைஷ்ணவ சந்நியாசிகள், “ஏகாந்திகள்” என்றும், சைவ சந்நியாசிகள், “சிவயோகிகள்” என்றும் அழைக்கப்பட்டனர். ஆகமங்களின் அடிப்படைக் கொள்கைப்படி, எல்லா இனத்தவர்க்கும் உரியதான பக்தி நெறி, ஒரு இல்லறத்தானையும், வாழ்க்கைப் பெருங்கடலைக் கடந்து கரைசேர்க்க வல்லதாம் ஆதலின் சந்நியாச நிலை மோக்ஷம் அடைவதற்கான, அடிப்படைத் தேவையன்று. பக்தர்கள் சந்நியாசிகள், ஆகின்றனர் என்றால், அதற்குக் காரணம் யோகப் பயிற்சி, ஆகம நெறியோடு இரண்டறக் கலக்கவில்லை ஆயினும்,