பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தமிழர் வரலாறு

தாம் எனக்கருதும், அழுத்தமான சோர்வு வாதம். அதாவது இம்மையிலும், மறுமையிலும், சுவர்க்கலோகத்தில் போலவே, பூலோகத்திலும், ஐம்பொறி இன்ப நுகர்வின் மீதான கொடிய வெறுப்புணர்ச்சி, மக்களை அடிமை கொண்டுவிட்டது. சிந்தனையாளர்கள், நிலைதடுமாறும், இவ்வுலகியலுக்கு இடையில் ('நாம ரூபம்') நிலை தடுமாறும் இயல்பு வாய்ந்த ஒரே பொருளான (அக்ஷரம்) பிரம்ம பரமம் மீதான பல்வேறு வகையான தியான நிலைகளில், கேட்டிலிருந்து மீள்வ தற்கான ஒரு வழியினைத், தேடிக்காணலாயினர். அதன் பயனாய், உபநிஷதத்தின் முப்பத்திரண்டு வித்யாக்கள் பிதந்தன. கர்மகாண்டத்து வழிமுறைகளின் அடிச்சுவடுகள் "காண்டொக்யத்திலும்," "பிரஹதாரண்யக" விலும் விளங்க உரைக்கப்படும், வித்யாக்களில் தெளிவுறத் தோன்றுமளவு, உபசிஷநங்கள், கர்மகாண்டத்திலிருந்து படிப்படியாகத் தோன்றி வளர்ச்சி நிலைபெற்றன. என்றாலும் , மக்களில் பெரும்பாலோர் உள்ளுறுதி அற்ற நோஞ்கான்களாயினர். அவர்களின் உள்ளம், ஒளபநிஷத கொள்கை, வயிற்சிகளின் விழுமிய சிறப்பு நிலையினை அடையும் உண்ர்வு களால் நிறைந்து வழியலாயிற்று. அவர்களுக்காகவே முகிழ்த்தன, ஆகமக் கொள்கைகளும் பயிற்சிகளும். இவை, உலகின் சாதாரண வாழ்வின் இயல்புகளோடு பங்கு கொண்டு விட்டன. கடவுள் வழிபாடு என்பது, மக்களைப்போற்றும், சிறப்பாக, குருக்கள் மற்றும் அரசர்களைப் போற்றும் வழிபாட்டு நெறியின் மறுபடிவமேயாம். இவ்வாறு, பாரதப் போருக்குப் பிற்பட்ட காலமே, உபநிஷதங்களும், தலையாய ஆகமங்களும் தோன்றிய காலமாம் என்பதைக் காண்கிறோம்

ஆகமங்களின் மூலம் :

ஆகமப் பயிற்சிகள் எங்கிருந்து தோன்றின என்ற இரண்டாவது வினாவிற்கு விடை காண்பது சிறிது அதிக அரு. மையுடைத்து, ஆகம வழிபாட்டு முறைகள் முழுக்க முழுக்கத் தீ வழிபாடற்றது. ஆதலாலும், வழிபாட்டைத் தொடர்ந்த வேதம் ஓதல் வேண்டப்படாதது ஆதலாலும், அவை தஸ்யூ