பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆகமங்களின் தோற்றம்

187

வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தஸ்யூ வழிபாட்டுமுறை, வடக்கு தெற்கு உள்ளிட்ட இந்தியப் பெரு நிலப்பரப்பு முழுவதிலும், ஆரிய வழிபாட்டு முறை தோன்றுவதற்கு முன்னரே, நிச்சயமாக இருந்து வந்தது. வேதங்களும், அவற்றின் துணை நூல்களான வேத இலக்கியங்களும், அத்துணைப் பரப்புடையவும், எல்லாப் பொருள்களையும் தம்மகத்தே அடக்கிக்கொண்டனவும் ஆம் ஆதலின், தஸ்யூ வழிபாட்டு உரிமைகள், வேத காலத்தில் என்ன ஆயின என்ற வினாவை, எவன் ஒருவனும் தனக்குத் தானேயும் கேட்டுக்கொண்டான் அல்லன். ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள், ஆரியர் தஸ்யூக்களிடையேயான பகை, இனம் பற்றியதாம் என்பதற்காம் பல்வேறு விளக்கங் களிலும், தஸ்யூக்களை ஆரியர்களோடு இரண்டறக்கலக்கப் பண்ணும் புரியாப்புதிரிலும், ஆழ்ந்து போயிருந்தமையால், ஆசிய வழிபாட்டுமுறை பரவிய பின்னர், தஸ்யூ வழிபாட்டு முறையின் வரலாறு பற்றி ஆய, அவர்கள் ஒரு முறையும் நின்று நோக்கினாரல்லர். இவ்வினாவுக்கும் பொருத்தம் உற விடையளிக்க நம்மால் இயலுவதற்கு, "ஸ்ரெளத" வேள்விகள் எனப்படுபவை, "ர்த்விகா" என அழைக்கப்படும் வேள்வி ஆசிரியர்கள் மட்டுமே பங்கு கொள்ளக் கூடியது ; வேதவேள்விகளை நடத்துவதற்குத் தேவைப்படும் பொருட்களைத் தருமளவு பெருஞ்செல்வம் வாய்ந்த வேந்தர்களும், வேந்தர் நிகர் விழுநிதிச் செல்வர்களும் வணிகர்களும், அவ்வேள்விகள் தரும் கட்புலனாகாப் பலன் களைத்தான் பெற முடியுமேயல்லாது, அவ்வேள்விச் சடங்குகளில் பங்கு கொள்ளக் கூடாது. எல்லோர்க்கும் தெரிந்த சமயம் என அழைக்கப்பட வேண்டியதான பொதுமக்களின் சமயச் சடங்குகள் ஆகா என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். மனைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தீ வழிபாடுகளில் பயன்படும் மந்திரங்களை அதர்வ வேதம் கொண்டுள்ளது உண்மை ; ஆனால், இவ் வழிபாட்டு முறைகள், ஒருவர்விடாமல் மக்கள் எல்லோராலும், ஏதும் அறியாப் பாமரர்களைப் போலவே முற்றவும் அறிந்த உயர்ந்